வெளியே போகும்போது தர்ஷா சொன்ன வார்த்தை.. மூன்று வாரத்திற்கு இத்தனை லட்சங்களா சம்பளம்?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது வாரத்தில் வெளியான தர்ஷா குப்தா மூன்று வாரங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் 14 விஜய் டிவி பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி 3 வாரம் முடிவடைந்திருக்கும் நிலையில் முதல் இரண்டு வாரம் இரண்டு ஆண் போட்டியாளர்கள் வெளியேறினர்.

அதிலும் முதல் வாரத்திலேயே ரவீந்தர் வெளியேறியது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் தான். ஆனால் இவர் வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பி வந்ததும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டார்.
முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியே செல்லும் போது விஜய் சேதுபதி அவரிடம் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களோடு நீங்கள் ஒரு வாரம் இங்கிருந்துவிட்டீர்கள், அவர்கள் பற்றிய உங்கள் ரிவ்யூ சொல்லிட்டு போங்க என்று சொல்ல, அவர் எல்லா போட்டியாளர்களையும் முகத்துக்கு நேராக தன்னுடைய பாராட்டு மற்றும் கோபத்தை காட்டி இருந்தார்.

அதற்குப் பிறகு வெளியேறும் போட்டியாளர்கள் ரவீந்தரை ஃபலோ பண்ணி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது சக போட்டியாளர்கள் மீது தனக்கு இருந்த கோபத்தை எல்லாம் மேடையில் கொட்டி கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது வாரத்தில் அர்னாவ் உள்ளிருக்கும் ஆண் போட்டியாளர்களை ஜால்ராஸ் என்று பேசியிருந்தார்.
அதுபோல நேற்று வெளியே சென்ற தர்ஷா குப்தா கூட உள்ளிருக்கும் ஆறு பெண் போட்டியாளர்கள் தான் குரூப்பாக விளையாடுகிறார்கள். இவங்க ஆறு பேர் கூட்டணி எடுக்கும் முடிவு தான் இந்த வீட்டிற்குள் அமல்படுத்தப்படுகிறது. மீதமுள்ளவர்களை எல்லாம் டார்கெட் செய்கிறார்கள் என்றும் இவர்களில் இரண்டு பேர் வெளியே வரவேண்டும் அதற்கான வேலைகளை நான் செய்வேன் என்றும் சொல்லியிருந்தார்.

அதற்கு விஜய் சேதுபதி உங்களுக்கு இருக்கும் கோபத்தை எல்லாம் இந்த மேடையில் வந்து இப்படி பேச வேண்டாம் என்று அறிவுரை சொல்லி இருந்தார். மொத்தம் உள்ளே 9 பெண் போட்டியாளர்கள் இருந்த நிலையில் தர்ஷா குப்தா, சௌந்தர்யா, சாச்சிகா என மூன்று பேரும் மட்டும் தனியாக பிரிக்கப்படுவதாக தர்ஷா நேற்று மேடையில் சிரித்தபடியே போட்டு தாக்கி இருந்தார்.

இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் இவர் இந்த நிகழ்ச்சியில் விளையாடுவதற்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் 20 நாட்கள் இந்த வீட்டிற்குள் தங்கி இருந்த நிலையில் 5 லட்சம் இவருக்கு சம்பளம் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்த பணம் முழுமையாக இவருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இதில் டேக்ஸ் எல்லாம் பிடித்தது போகாதான் கிடைக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக உடை வாங்குவதற்காகவே தர்ஷா இந்த சம்பளத்தை விடவும் அதிகமாக செலவு செய்திருப்பார்.












Click it and Unblock the Notifications