Bigg Boss 8: சர்ச்சை போட்டியாளர்களை தட்டி தூக்கிய குழு.. இத்தனை பேரா? லீக்கான இறுதி லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு தொடங்கியிருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் யாருடைய பெயர் எல்லாம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

சின்னத்திரை ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் ஆறாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் எட்டாவது சீசனில் இருந்து விலகியதும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் புதிய தொகுப்பாளராக வந்திருக்கிறார்.

vijay tv bigg boss entertainment

இதனால் அவருடைய ஆளுமை தன்மை இந்த நிகழ்ச்சியில் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் அதனாலேயே ரசிகர்களுக்கு அதிகமாக பரீட்சையமான போட்டியாளர்கள் இந்த சீசனில் களம் இறங்குவதற்காக தீவிரமான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் தற்போது 18 போட்டியாளர்களின் பெயர் வெளியாகியிருக்கிறது அதை பார்க்கலாம்.

குரோஷி: விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட குரோஷி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கிறார். அவர் இப்போது மணிமேகலை மற்றும் பிரியங்கா விஷயத்தில் கருத்து தெரிவித்து அதிக அளவில் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அருண் பிரசாத்: விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அருண் பிரசாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. இவரும் விஜே அர்ச்சனாவும் காதலித்து வருவதாக சில செய்திகள் ஏற்கனவே பரவி வருகிறது. அதை இருவரும் ஆமாம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லாமல் மழுப்பி வருகிறார்கள். கடந்த சீசனில் அர்ச்சனா கலந்து கொண்டதை தொடர்பு இந்த சீசனில் இவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் செந்தில்: கவுண்டமணியோடு பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்த செந்தில் பல வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகை ஷாலினி ஜோயா: ஜோயா பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு டிடிஎஃப் வாசனின் காதலி என்பது இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்திருக்கும். அதே நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய பெயரும் இருக்கிறது.

நடிகர் ரியாஸ் கான்: நடிகர் ரியாஸ்கானின் மகன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ரியாஸ் கான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.

நடிகை பூனம் பஜ்வா: பூனம் பஜ்வா பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்போது சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தும் இவரும் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.

நடிகர் ஜெகன்: நடிகர் ஜெகன் சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அயன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை. சமீபத்தில் கூட இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் ரஞ்சித்: நடிகர் ரஞ்சித் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி கேரக்டரில் பிரபலமடைந்து கொண்டிருக்கிறார். அதுபோல சமீபத்தில் தான் அவர் கவுண்டம்பாளையம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து சமூக வலைத்தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அமலா ஜாஜி: சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் அமலா ஜாஜியை தெரிந்திருக்கும் டிக் டாக் பிரபலமான இவர் இப்போது இன்ஸ்டா, youtube-ல் பிரபலமாக இருக்கிறார்.

நடிகை சம்யுக்தா விஸ்வநாதன்: சமீபத்தில் வெளியான கட்சி சேரா பாடல் மூலம் பிரபலமடைந்த சம்யுக்தா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ப்ரீத்தி முகுந்தன்: நடிகர் கவின் நடித்த ஸ்டார் திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த பிரீத்தி சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கிறார். இப்போது அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்.

டிடிஎஃப் வாசன்: சர்ச்சைகளுக்கு பெயர் போன டிடிஎஃப் வாசன் சமூக வலைத்தளத்தில் மட்டுமல்லாமல் செய்தி சேனல்களிலும் அடிக்கடி தென்படும் நபராக இருக்கிறார். அவரும் இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறாராம்.

ஜாக்குலின்: விஜய் டிவியில் ஆரம்பத்தில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்லின் தேன்மொழி பிஏ என்ற சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ரவீந்தர் சந்திரசேகர்: தயாரிப்பாளரும் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் சந்திரசேகர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பல சீசன்களாக ரிவ்யூ செய்த நிலையில் அவரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக போகப் போகிறாராம்.

பவித்ரா ஜனனி: விஜய் டிவியில் ஆரம்பத்தில் துணை கேரக்டரில் நடித்த பவித்ரா ஜனனி ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் கதாநாயகியாக மாறி இருந்தார். அதைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

நடிகை அன்ஷிகா: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கும் அன்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.

வினோத் பாபு: விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்த வினோத் பாபு சமீபத்தில் விஜய் டிவியில் முடிவடைந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அக்ஷிதா: காற்றுக்கென்ன வேலி சீரியலில் வில்லியாக நடித்த அக்ஷிதா இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+