பிக் பாஸ்க்குள் பெண்கள் இப்படி பச்சையா பேசுறாங்களே? அதுவும் முத்துக்குமார் பிறப்பை பற்றி கூட!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்களில் ஒருவரை காதலிக்க வேண்டும்.. அப்படி என்றால் தான் இந்த வீட்டிற்குள் கன்டென்ட் கிடைக்கும் என்று பிளான் போட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் லீக் ஆகி அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒவ்வொரு சீசனிலும் ஒரு காதல் புறா உருவாகிறது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சிலர் உருக உருக காதலித்து பின்னாடியே சுற்றிக்கொண்டு டாஸ்க்கில் கூட சொதப்பிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் வெளியே வந்த பிறகு நீ யாரோ நான் யாரோ என்று டாடா காட்டி விட்டு போய்விடுவார்கள். இவர்களுக்காக ஹையர் விட்ட ரசிகர்களில் என்ன இவங்க இப்படி இருக்காங்களே என்று புலம்பி கொண்டு இருப்பார்கள். இதற்கு உதாரணமாக முதல் சீசனில் இருந்து ஆறாவது சீசன் வரைக்கும் பலரை சொல்லலாம்.

முதல் சீசனில் ஆரவ் மற்றும் ஓவியா காதல் கன்டென்ட் கொடுத்து கொண்டு இருந்தார்கள். அதிலும் ஆரவ், ஓவியாவின் மருத்துவ முத்தம் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு கவின்- லாஸ்லியா, பாலாஜி முருகதாஸ்- ஷிவானி உட்பட பலர் ஒவ்வொரு சீசனிலும் காதல் கன்டென்ட் கொடுப்பதற்காகவே பிக்பாஸ் கோர்த்து விடுகிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதை விளக்கும் வகையில் தான் நேற்று ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அதாவது நேற்று பெண்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது இப்படியே போய்கிட்டு இருந்தால் நல்லா இருக்காதே ஆண் போட்டியாளர்களில் யாரையாவது காதலிங்களேன் என்று ஆனந்தியும் ஜாக்குலினும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அதற்கு தர்ஷா, பவித்ரா, தர்ஷிகா உட்பட சிலர் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லாம் செட் ஆகமாட்டாங்க. யாராவது புதுசா இறக்குங்க பார்க்கலாம் என்று சொல்கிறார். அதற்கு ஜாக்குலின் உள்ளே ரஞ்சித் சார்லாம் இருக்காரு அவர கூட லவ் பண்ணலாம் என்று சொல்கிறார்.
ஜாக்குலின்க்கு ரஞ்சித்திற்கு கல்யாணம் ஆகி பசங்க இருக்கிறது தெரியுமா? இல்லையா? என்று தெரியவில்லை. 50 வயதான ரஞ்சித்தை கூட விடாமல் இவர்கள் கிண்டல் என்கிற பெயரில் பேசிக் கொண்டிருந்தது ரசிக்கும் படியாக இல்லை என்பது பலருடைய கருத்து. அதோடு அங்கிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் விஜே விஷாலை லவ் பண்ணலாமே என்று சொல்ல, அவன் எல்லாம் இதற்கு செட்டாக மாட்டான் அவன் தான் அண்ணன் என்றுதான் சொல்ல வேண்டும் என்று பவித்ரா சொல்கிறார்.

அப்போது தர்ஷாவும், பவித்ராவும் நீ முத்துக்குமாரனை லவ் பண்ணலாம் நீயும் பேச்சாளர் அவனும் பேச்சாளர் என்று ஆனந்தியிடம் சொல்ல, அதற்கு ஆனந்தி செட் ஆகாதுபா அவன் பேசியே என்னை கொன்னுருவான். அவன் எனக்கு செட்டாகாது என்று கிண்டலாக சொல்கிறார். அப்போது தர்ஷா முத்துக்குமரன் ரொம்ப சின்ன பையன். அவன் பிறந்தது 1999 என்று சொல்ல அங்கிருக்கும் சிலர் இருக்காது அவன் 1997ல் பிறந்தார் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு தர்ஷா இல்லை அவன் விஜே விஷாலோட 2 வயசு சின்னப் பையன் என்று சொன்னான். விஷால் 1997 இல் பிறந்திருக்கிறான் என்றால் அப்போ முத்துக்குமரனின் பிறப்பு 1999 தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர்கள் இப்படி ப்ளான் போடுவது பார்க்கும் ரசிகர்கள் இது என்ன கேவலமாக இப்படி செய்கிறார்கள்? இவர்கள் அங்கிருக்கும் கேமராவை மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லை ஆண்களை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று இவ்வளவு கீழ்த்தரமாக யோசிக்கிறார்களா என்று திட்டி வருகிறார்கள்.

அதோடு இன்னும் ஒரு சில ரசிகர்கள் சும்மாவே ரஞ்சித் நாடக காதலை எதிர்த்து பிரபலமானவர். இப்போ பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களின் நாடக காதல் தெரிய வந்தால் அவருடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்றும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பெண் போட்டியாளர்கள் ஆண்களை காதலில் வீழ்த்த போடும் பிளான் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்டை தட்டி விடுங்க பாஸ்.













Click it and Unblock the Notifications