BB 8 Tamil finale தொடங்கியாச்சு.. Ex போட்டியாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு! இதுவரை நடக்காத அதிசயம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே தொடங்கி இருக்கிறது. இதில் விஜய் சேதுபதியின் வருகைக்கு முன்பு இந்த சீசனில் கலந்து கொண்டு எவிக்ட் ஆன முன்னாள் போட்டியாளர்கள் பிரம்மாண்டமாக வரவேற்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே தற்போது தொடங்கி இருக்கிறது. இதில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 போட்டியாளர்களில் ஏற்கனவே எவிக்ஷனாகி வெளியே போன 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வித்தியாசமாக அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதாவது போட்டியாளர்கள் எல்லோருமே இரண்டு பேராக மேடைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வரும்போது ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்கள் பேசி ட்ரெண்டான வார்த்தைகள் அவர்களுக்கு வரவேற்பு பாடலாக போடப்பட்டிருக்கிறது. இது இதுவரைக்கும் எந்த சீசனிலும் நடைபெறாத வித்தியாசமான முறையாக இருக்கிறது.

பிக் பாஸ் பினாலே முடிவடைந்த பிறகு பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெறும். அப்போதுதான் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த நிகழ்வுகள் குறித்து கலாய்ப்போடு பாடல் வெளியாகும். ஆனால் இந்த முறை பிக் பாஸ் போட்டியாளர்கள் பினாலே மேடைக்கு வரும்போது அவர்கள் கலாய்ப்பு பாடலோடு வரவேற்கப்பட்டிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விஜய் சேதுபதி இன்றைய ஹீரோ யார் என்று கேட்க, ரசிகர்கள் எல்லோரும் நீங்கதான் என்று சொல்கிறார்கள். அதற்கு விஜய் சேதுபதி இல்ல ட்ராபி அதை பார்க்கலாமா? என்று பிக் பாஸ் 8 ட்ராபியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதில் விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களை அனுப்பி வைக்கும்போது கொடுத்த டம்மி ட்ராஃபியை போலவே பிக் பாஸ் 8 டிராபியும் இடம் பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications