BB 8 finale: ஜாக்குலின் பின்னாடி ஜெஃப்ரி, சத்யா செய்த செயல்.. அம்பலப்படுத்திய சேதுபதி! தரமான சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவில் ஜாக்குலின் எவிக்ஷன் ஆகும்போது ஜெஃப்ரி மற்றும் சத்யா இருவரும் சிரித்தது குறித்து விஜய் சேதுபதி போட்டுக் கொடுக்க, அதற்கு ஜாக்குலின் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி இன்று கிராண்ட் பினாலே நிகழும் பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 24 போட்டியாளர்கள் இருந்த நிலையில் 5 போட்டியாளர்கள் மட்டும் பைனலுக்கு வந்திருக்கிறார்கள்.

கடந்த வாரத்தில் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்ற போது ஜாக்குலின் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தபோது இரண்டு நிமிட தாமதம் ஆகிவிட்டதால் அதிரடியாக எவிக்ஷன் செய்யப்பட்டார். அப்போது பவித்ரா, முத்துக்குமரன் விஜே விஷால் எல்லோரும் ஜாக்லினிடம் ஆறுதலாக பேசிக் கொண்டிருந்தார்கள். ஜாக்குலின் அவர்களிடம் அழுது கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் சத்யா மற்றும் ஜெஃப்ரி இருவரும் ஜாக்குலின் அழுவதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். இந்த வீடியோஸ் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது அது குறித்து இன்று பினாலே மேடையில் விஜய் சேதுபதி ஜாக்குலினிடம் போட்டு கொடுத்திருக்கிறார். அதாவது இன்று பிக் பாஸ் குழுவினர் ஏற்கனவே எவிக்ஷனான போட்டியாளர்கள் சிலருக்கு அவார்டு கொடுத்திருந்தார்கள்.
அப்போது ஜாக்குலினுக்கு சூப்பர் பவர் போட்டியாளர் என்ற விருது கொடுக்கப்பட்டது. அந்த விருதை அறிவிக்கும் போது நீங்க எவிக்ஷன் ஆகும்போது ஜெஃப்ரி, சத்யா செய்த செயல் உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க, அதற்கு ஜாக்குலின் அந்த வீடியோவை நான் பார்த்துட்டேன் சார்.
இதுவரைக்கும் நம்பியவர்கள், கூடவே இருந்தவர்கள் என்னை குத்தியதையும் நான் புரிந்து கொண்டேன் என்று சொல்ல, ஜெஃப்ரியும், சத்யாகவும் என்ன இவங்க இப்படி சொல்லுறாங்க என்பது போல ரியாக்ஷன் செய்கிறார்கள். பிறகு சத்யா, ஜாக்குலின் நீ எவிக்ஷன் ஆனதற்காக அப்படி நாங்கள் சிரிக்கல. நீ வெளியே போகும்போது சிலருடைய ரியாக்ஷனை பார்த்து தான் நாங்கள் சிரித்துக்கொண்டிருந்தோம் என்று சொல்கிறார்.
அது உண்மையாக இருந்தால் ஓகே நான் இப்போ எல்லாரையும் புரிஞ்சுகிட்டேன் என்று ஜாக்குலின் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். அப்போது விஜய் சேதுபதி சத்யா சொல்றதுதான் உண்மை என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார். ஆனால் ஜாக்குலின் பற்றி சத்யா மற்றும் ஜெஃப்ரி சிரிக்கும் போது கேமரா அவர்கள்தான் போக்கஸ் செய்தது என்பது அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிந்திருக்கும். அதே போல எவிக்ஷனான ஜாக்குலினும் இந்த வீடியோவை பார்த்து தான் வருத்தப்பட்டதாக கிராண்ட் ஃபினாலே மேடையில் பகிர்ந்து இருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications