Bigg Boss 8 finale- வில் கமல்ஹாசனுக்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி.. அந்த வார்த்தை ஹைலைட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது விஜய் சேதுபதி நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7 சீசன்களாக கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் எட்டாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே தான் இந்த சீசனில் இருந்து ரெஸ்ட் எடுக்க போவதாக கூறியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கியிருந்தார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. அதில் ஆரம்பத்தில் இருந்து சர்ச்சைகளும் வதந்திகளும் வழக்கம் போல வந்து கொண்டுதான் இருந்தது. ஆனாலும் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டு போய்க் கொண்டிருந்தார். வார இறுதி நாட்களில் இவர் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்காக அதிகமான ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதுபோல விஜய் சேதுபதி குறித்தும் அதிகமான ட்ரோல் வரதான் செய்தது. ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னை பற்றி கூட பரவி வரும் ட்ரோல் மற்றும் மீம்ஸ்கள் குறித்து விஜய் சேதுபதி அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருந்தார். இந்த நிலையில் இன்று கிராண்ட் பினாலே நிகழ்ச்சி முடிவடைந்து இருக்கிறது.
8வது சீசனில் முத்துக்குமரன் வின்னராகவும், சௌந்தர்யா ரன்னராகவும் தேர்வாகி இருக்கிறார்கள். மூன்றாவது இடத்தில் விஜே விஷால் நான்காவது இடத்தில் பவித்ரா மற்றும் ஐந்தாவது இடத்தில் ரயான் தேர்வாகி இருக்கிறார்கள். அதுபோல அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இவ்வளவு உருவாகி இருக்கிறார்கள். அவர்தான் ஏழு சீசன்களாக ரசிகர்களை கட்டி வைத்திருந்தார். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கும் கமல்ஹாசன் சாருக்கு நன்றி. என்னால் அவரைப் போல செய்ய முடியவில்லை என்றாலும் என்னால் முடிந்ததை நான் செய்திருக்கிறேன் என்று எமோஷனலாக விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications