Bigg Boss finale- வில் கமல்ஹாசனை பாலோ செய்த விஜய் சேதுபதி.. அந்த வார்த்தை தான் ஹைலைட்!
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஏழு சீசன்களாக தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசனை இந்த சீசனில் தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி பாலோ செய்து இருக்கிறார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி என்றாலே அதற்கு அடையாளமாக கமல்ஹாசன் தான் இருந்து வந்தார். முதல் சீசனில் இருந்து 7 சீசன்கள் வரைக்கும் அவர்தான் தொகுப்பாளராக இருந்தார். தமிழில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது இதுவெல்லாம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதே நேரத்தில் முதல்முறையாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்றதும் பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தனர். அது போல ஒவ்வொரு சீசனிலும் கமல்ஹாசன் நடுநிலைத் தவறாமல் தீர்ப்பு சொல்வது மற்றும் போட்டியாளர்களின் மனம் கோணாமல் அவர்களின் குறைகளை அவர்களுக்கே சொல்வது சொல்வது, அதுபோல வார இறுதி நாட்களில் புத்தக பரிந்துரை செய்வது, அரசியலை அங்கே இங்கே மெல்ல மெல்ல தூவுவது என்று கமல்ஹாசன் தன்னுடைய தனி அடையாளத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டி இருந்தார்.
ஆனால் 8வது சீசன் தொடங்குவதற்கு முன்பே அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து ரெஸ்ட் எடுக்க போவதாக அறிவித்தார். அதற்கு பிறகு விஜய் சேதுபதி எட்டாவது சீசனில் கமிட் ஆகி இருந்தார். விஜய் சேதுபதி தன்னுடைய தனி ஸ்டைலில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வார இறுதி நாட்களில் இவருடைய எபிசோடு பார்ப்பதற்காக அதிகமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெறுகிறது. இதுவரைக்கும் எந்த இடத்திலும் கமல்ஹாசனை பாலோ செய்யாமல் விஜய் சேதுபதி தன்னுடைய ஸ்டைலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தாலும் இன்று பைனல் நிகழ்ச்சியில் ஃபைனலாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில் அவர்களை கமல்ஹாசனை போலவே சந்தித்திருக்கிறார்.
அப்போது பைனல் போட்டியாளர்கள் ஐந்து பேருக்கும் அவர்களுடைய மறக்க முடியாத புகைப்படத்தில் தன்னுடைய கையெழுத்து போட்டு கொடுத்து இருக்கிறார். இதுபோல கமல்ஹாசன் எல்லா சீசன்களிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று பைனல் போட்டியாளர்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொடுப்பார். அதே ஸ்டைலில் விஜய் சேதுபதியும் பாலோ செய்து இருக்கிறார்.
அப்போது விஷால் தனக்கு கையெழுத்து போடும்போது நீங்கள் என்னை தம்பி என்று எழுதுங்கள் சார் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி சிரித்தபடியே சரி என்று எழுதிக் கொடுத்துவிட்டு பிறகு நான் டீலக்ஸ் படத்தில் ஒரு வசனம் வரும், ஒரு இடத்தில் மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ அதற்கு தகுந்த போலவே நாம இருந்து விட வேண்டும். அந்த இடத்தில் நாம் வேறு விதமாக இருந்தால் நம்மை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.. என்று அந்த வார்த்தையை நான் பிரேம் செய்து எங்கள் வீட்டில் மாட்டி இருக்கிறேன். அதுபோல உங்களுக்கு எந்த விஷயம் உங்களை ஹைலைட்ஸ் செய்கிறதோ அதை நீங்கள் மனதில் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications