BB 8 finale-வில் ஜாக்குலினுக்கு போடப்பட்ட வீடியோ.. Ex போட்டியாளர்கள் ரியாக்ஷன்.. சேதுபதி கேட்ட கேள்வி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் ஏற்கனவே எவிக்ட் ஆகி வெளியே சென்ற ஜாக்குலினுக்கு பயண வீடியோ போட்டு விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே தற்போது தொடங்கி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆகி வெளியே வந்த போட்டியாளர்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அதற்கு பிறகு விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் என்ட்ரியானார். அவர் முன்னாள் போட்டியாளர்களிடம் நீங்க எல்லாரும் இங்க வந்திருக்கிறங்க. ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் மிஸ் ஆகி இருக்கிறாங்க அவங்களை கூப்பிடலாமா? என்று ஜாக்குலினை கூப்பிடுகிறார். ஜாக்குலின் தன்னுடைய மேடைக்கு வருகிறார். பிறகு அவருக்கு பயண வீடியோ போடப்படுகிறது.
அதில் அதிகமான நேரம் ஜாக்குலினுக்கு வீடியோ இருக்கிறது. அதில் ஆரம்பத்தில் ஜாக்குலின் சந்தோஷமாக இருந்தது, பிறகு சண்டை போட்டது, பிறகு அழுதது... பணப்பெட்டியை ரிஸ்க் எடுத்து எடுத்தது என எல்லாம் அந்த ஏவியில் காட்டப்பட்டிருக்கிறது. அதை பார்த்த முன்னாள் போட்டியாளர்கள் எழுந்து நின்று ஜாக்குலினுக்கு கைதட்டுகின்றனர்.
அதோடு அங்கிருந்த மக்கள் எல்லோருமே ஜாக்குலினை பாராட்டுகிறார்கள். பிறகு விஜய் சேதுபதி ஜாக்குலினை பாராட்டி பேசுகிறார். உண்மையில் நீங்கள் ரொம்பவே தைரியமான பொண்ணு தான். நான் சொல்ல நினைத்ததை எல்லாம் பிக் பாஸ் சொல்லிவிட்டார். நீங்க இதுவரைக்கும் நடு பென்ச் ஸ்டுடென்ட் என்று சொல்லிக் கொண்டிருந்தீங்க. ஆனால் நீங்கள் தான் சூப்பர் என்று இப்போது நிரூபித்திருக்கிறீங்க.

இதற்கு சாட்சி இந்த பயண வீடியோ. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்திருந்தால் கூட உங்களைப்போல ரிஸ்க் எடுத்து அந்த பெட்டியை எடுத்து இருப்பேனா? என்று எனக்கு தெரியாது.
ஆனால் நீங்கள் அத்தனை பேரும் சொல்லியும் என்னுடைய தைரியத்தை நிரூபிக்கும் வகையில் அந்த டாஸ்க்கில் கலந்து கொண்டீர்கள் என்று பாராட்டி இருக்கிறார். பிறகு ஜாக்குலின் பேச வருகிறார். அப்போது தான் 15 வாரம் எவிக்ட் ஆன பிறகும் 15 வாரமும் சலிக்காமல் ஓட்டு போட்ட மக்களுக்கு ரொம்ப நன்றி.
மக்களிடம் இந்த கைத்தட்டலை வாங்க வேண்டும் என்றுதான் நான் ஆசைப்பட்டேன். அது இப்போ எனக்கு நிறைவேறிடுச்சு. மக்களின் அன்பை பார்க்கும்போது எனக்கு கண்கள் கண்ணீரில் நனைகிறது. இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.
ஆரம்பத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு விஜய் டிவி தான் வாய்ப்பு தந்து என்னை வெளி உலகத்திற்கு காட்டியது. இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் என்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது எனக்கு ரொம்பவும் சந்தோஷம் என்று கண்கள் கலங்கி எமோஷனலாக ஜாக்குலின் பேசியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications