பிக் பாஸ் 8 ஜெயிக்க காரணம் அந்த பெண்தான்.. முத்துக்குமரன் சொன்ன வார்த்தை! விஜய் சேதுபதி ரியாக்ஷன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று நடைபெற்றது. இதில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வானார். அப்போது தான் ஜெய்ப்பதற்கு முக்கிய காரணம் தன்னுடைய அம்மா தான் என்று விஜய் சேதுபதி முன்பு முத்துக்குமரன் பேசி இருக்கிறார்.
விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக முடிவடைந்தது. பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபடியே இந்த சீசன் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் பெயர் வாங்கி இருந்தார்.

சௌந்தர்யா இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றார். வி.ஜே விஷால் மூன்றாவதாக வெற்றி பெற்று இருக்கிறார். அவரை தொடர்ந்து பவித்ரா நான்காவது இடத்திலும், ரயான் ஐந்தாவது இடத்திலும் தேர்வாகி இருந்தார்கள். அதுபோல வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானதும் அவருடைய அப்பாவையும், அம்மாவையும் மேடைக்கு விஜய் சேதுபதி அழைத்திருந்தார்.
அவர்கள் இருவரையும் முத்துக்குமரன் ஆர தழுவி முத்தம் கொடுத்துக்கொண்டார் இதை பார்த்து சக போட்டியாளர்கள் நெகிழ்ந்து போயிருந்தனர். அவர் கோப்பையை வாங்கிய பிறகு இந்த வெற்றி குறித்து பேசும்போது இந்த கோப்பை என்னுடையது மட்டுமல்ல எங்கள் 24 பேருடையதும் கூட. என்னால் வெல்ல முடியும் என்றால் அனைவராலும் வெல்ல முடியும்.
என்னை திட்டி, திருத்தி என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள் என்று பேசியிருந்தார். அதைத்தொடர்ந்து இது என்னுடைய வெற்றி இல்லை. எந்த ஏழ்மையிலும், எந்த வறுமையிலும், எந்த இருட்டான சூழ்நிலையும் தன்னம்பிக்கையும் தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காத ஒரு பெண்ணோட வெற்றி. அந்த பெண் வேறு யாருமில்லை என்னுடைய அம்மா தான் என்று நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.
முத்துக்குமரனுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பிக் பாஸ் தமிழ் சீசன் 6வது நிகழ்ச்சியில் ரன்னராக வந்த விக்ரமன் உட்பட பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் முத்துக்குமரனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல முத்துக்குமாரன் டைட்டில் வெற்றி பெறுவதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்றதும் என்ன செய்யப் போகிறீர்கள் என்று விஜய் சேதுபதி கேட்டிருந்தார். அப்போது முத்துக்குமரன் நான் இந்த நிகழ்ச்சியை விட்டு போன பிறகு என்னுடைய அப்பா அம்மாவோடு சில நாட்கள் வீட்டிலேயே இருப்பேன். எங்கேயும் போகமாட்டேன்.
நான் இத்தனை நாட்களாக ஓடிக்கொண்டே இருந்தேன் என்னுடைய பெற்றோரை நான் சரியாக பார்த்துக் கொள்ள வில்லை. இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது மற்றவர்கள் எல்லோரும் அவர்களுடைய குடும்பத்தினரை பற்றி சொல்லும்போது என்னிடம் எதுவும் இல்லையே என்று நான் வருத்தப்பட்டேன்.
என்னுடைய அப்பா அம்மாவின் தியாகமும் நான் அப்போது புரிந்து கொண்டேன். அதனால் அவர்களோடு நான் நேரத்தை செலவிட வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய ஓட்டம் தான் முக்கியம் என்று நான் ஓடிக்கொண்டிருந்தால் ஒருவேளை அவர்களோடு உட்கார்ந்து பேசும் சூழ்நிலை ஏற்படாமலேயே போய் விடக்கூடாது என்ற பயமும் எனக்கு வந்து இருக்கிறது என்றும் பேசி இருந்தார்.
அதுபோல விஜய் சேதுபதி பல இடங்களில் முத்துக்குமரனின் இந்த முதிர்ச்சியான அணுகுமுறைக்கு காரணம் அவருடைய அம்மா தான் என்று பேசியிருந்தார். அதுபோல முத்துக்குமரனும் தன்னுடைய அம்மா குறித்து பேசியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications