பிக் பாஸில் கலக்கலாக என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பஞ்சாயத்து விஜே விஷாலுக்கு தானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நவம்பர் 2ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இந்த வாரம் தீபாவளி வாரம் என்பதால் விஜய் சேதுபதி வேஷ்டி சட்டை அணிந்து ட்ரெடிஷனலாக வந்தாலும் இந்த வாரம் நடந்த பிரச்சனைகள் பற்றி காரசாரமாக விவாதிக்க இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்று வாரங்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. நான்காவது வாரத்தில் இறுதி நாட்களான இன்று சனிக்கிழமை எப்போது ப்ரோமோ வரும் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. எப்போதும் சனிக்கிழமை ப்ரோமோ லேட் ஆக வரும் ஆனால் இந்த வாரம் கொஞ்சம் சீக்கிரமாக தான் வந்திருக்கிறது.

ஆனாலும் விஜய் சேதுபதி இந்த வாரம் உள்ளிருக்கும் போட்டியாளர்களை செம்மையாக ரோஸ்ட் செய்யப் போகிறார் என்று தான் தெரிகிறது. இதுவரைக்கும் மூன்று வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் முடிவடைந்து இருந்தாலும் கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி பெரிய அளவில் போட்டியாளர்களிடம் கடுமையை காட்டவில்லை. போட்டியாளர்களை பேசவிட்டு வேடிக்கை பார்த்து இருந்தார்.
ஆனால் அதற்கு முந்தைய வாரத்தில் அவர் ஒரு சிலரை மட்டும் விமர்சிக்கிறார். ஒரு சிலரை கண்டு கொள்ளாமல் விடுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. சோசியல் மீடியாவில் அருணிடம் விஜய் சேதுபதி கடுமையாக நடந்து கொள்கிறார். ஒரு சிலரை மரியாதை இல்லாமல் நடத்துகிறார் என்று விமர்சனங்கள் அளவுக்கு அதிகமாக இருந்தது. இதை விஜய் சேதுபதி நன்றாகவே கணித்திருந்தார்.
கடந்த வாரத்தில் கூட இது பற்றி விஜய் சேதுபதி பேசி இருந்தார். அதுபோல தன்னைப் பற்றிய கமண்ட் மற்றும் மீம்ஸுகளுக்கு கூட பதில் கொடுக்கும் விதத்தில் பேசி இருந்தார். அந்த வகையில் இந்த வாரத்தில் விஜய் சேதுபதி ஆள் மாறாட்டம் டாஸ்க் பற்றி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் இந்த முறை நடந்த ஆள் மாறாட்டம் டாஸ்க்கில் ஒரு சிலர் மட்டும்தான் சிறப்பாக செய்தார்கள். குறிப்பா சொல்லணும்னா சௌந்தர்யாவை சொல்லலாம். இதுவரைக்கும் இல்லாத ஒரு திறமையை இந்த வாரத்தில் காட்டி இருந்தார். சிலர் இந்த டாஸ்க்கிலும் அடுத்தவர்கள் மீது தனக்கு இருக்கும் வன்மத்தை காட்டினார்கள்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆள் மாறாட்டம் டாஸ்க் வன்மத்தை காட்டும் டாஸ்க் தான். ஆனாலும் சௌந்தர்யா, ஜாக்குலின் போன்றோர் கொஞ்சம் சுவாரசியமாக நிகழ்ச்சியை கொண்டு சென்றிருந்தனர். ஆனால் வி.ஜே விஷால் போன்றோரெல்லாம் பெரிய அளவில் ஒன்றும் செய்யவில்லை.
தற்போது வெளியான ப்ரோமோவில் கூட உள்ளிருக்கும் போட்டியாளர்கள் சிலர் நாம கொளுத்துன வெடி எல்லாம் வெடிச்சிடுச்சு என்று நினைத்து இருக்காங்க. ஆனா அதை பார்த்தவர்களுக்கு தானே தெரியும் எது வெடிச்சது? எது வெடிக்கல என்று அதைத்தான் இந்த வாரம் பேசப்போறோம் என்று சொல்லி இருக்கிறார். அதனால் இன்றைய எபிசோடில் பாராட்டும் இருக்கும், எதுவும் செய்யாதவர்களுக்கு ரோஸ்ட் இருக்கப் போகிறது என்று தெரிகிறது.
அதிலும் விஜே விஷால் ஆரம்பத்தில் முத்துக்குமரனை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதற்குப் பிறகு ஜாக்லின் பற்றி பேசிக்கொண்டிருந்தார். இப்போது சில நாட்களாகவே சௌந்தர்யா பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராகவும் சில கருத்துக்கள் குவிந்து வருகிறது.
விஜே விஷால் குறித்து இந்த வாரம் விஜய் சேதுபதி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி கேள்விகளுக்கெல்லாம் விஷால் சிரித்தே மழுப்பி விட்டார். இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications