சின்ன வயசில் நடந்த கொடுமை.. கதறிய அன்ஷிதா! எல்லாத்துக்கும் காரணம் இவங்க தான்! பகீர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் நவம்பர் ஆறாம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோவில் அன்ஷிதா அழுது கொண்டிருக்கிறார். தான் சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டாலும், தன்னுடைய வாழ்க்கை திசை மாறியதற்கு காரணம் சோசியல் மீடியா தான் என்று குற்றசாட்டு வைத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சில டாஸ்க்குகள் சம்பிரதாயம் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போதைய எட்டாவது சீசனிலும் எல்லா ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே கதை சொல்லும் டாஸ்க் தொடங்கிவிட்டது. தங்களுடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதை டாஸ்க் நடைபெற்று இருக்கிறது.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அதில் போட்டியாளர்கள் தங்களுடைய சோக கதை சொந்தக் கதையை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் எதிர் தரப்பில் கதையைக் கேட்கும் போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பமில்லை என்றால் டிஸ் லைக் கொடுத்துவிட்டால் கதை சொல்லும் நபர்கள் தொடர்ந்து கதை சொல்ல முடியாது என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார்.

நேற்று தீபக் சொன்ன கதையை சக போட்டியாளர்கள் ஏற்றுக் கொள்ளாததால் அவருக்கு டிஸ்கஸ் அதிகமாக வந்ததால் அவர் கையில் ஒரு வெடிகுண்டை கொடுத்து சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் மட்டும்தான் இதை கீழே வைக்க வேண்டும் மற்ற நேரங்களில் நீங்கள் இதை கையிலே கொண்டு போக வேண்டும் என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்திருக்கிறார்.

இவ்வளவு குறைந்த விலையில்.. அதுவும் இந்த ஏரியாவில் வீடு வாங்கவே முடியாது! சொந்த வீடு வாங்க செம சான்ஸ்
இப்படியான நிலையில் இன்று இந்த கதை சொல்லும் டாஸ்கில் நடிகை அன்ஷிதா தன்னுடைய சோக கதையை சொல்லி இருக்கிறார். அது தற்போதைய மூன்றாவது ப்ரோமோவில் வந்திருக்கிறது. அதில் நான் சின்ன வயதில் இருக்கும்போதே என்னுடைய அப்பாவும் அம்மாவும் பிரிந்து போய்விட்டாங்க.

என்னை கொண்டு போய் ஒரு போர்டிங் ஸ்கூலில் சேர்த்தாங்க. செல்லம், தங்கம் என்று எல்லோரும் கொஞ்சுற வார்த்தையை கேட்க வேண்டிய வயதில் நான் அதிகமாக கேட்டது கெட்ட வார்த்தை தான். அதற்குப் பிறகு நான் இந்த அளவிற்கு வந்திருக்கிறேன் என்றால் ஒரு இடத்தில் கூட எனக்கு யாரும் உதவிக்கு வரவில்லை.

நானாகத்தான் கஷ்டப்பட்டு, போராடி, அவமானப்பட்டு இந்த இடத்திற்கு வந்தேன். ஆனால் நான் ஒவ்வொரு இடத்திலும் போராடி மேலே வந்த போதுதான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. நான் செய்யாத தப்புக்காக என்னை பலர் திட்டினார்கள்.

இந்த சோசியல் மீடியா என்னுடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது என்று கண்ணீரோடு அழுது இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்ஷிதா செல்லமா சீரியல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமானார். அந்த சீரியல் மூலமாக அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதோடு சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்தார். அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் செல்லமா சீரியலில் அவரோடு கதாநாயகனாக நடித்த அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் வாழ்க்கையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

இவர்கள் குடும்ப பிரச்சனைக்கு காரணம் அன்ஷிதா என்று திவ்யா ஸ்ரீதர் சொல்லி இருந்தார். அதற்கு பிறகு இணையத்தில் பலரும் அன்ஷிதாவை தொடர்ச்சியாக திட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அன்ஷிதா திவ்யா ஸ்ரீதர் சண்டை போட்ட ஆடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனால் அவருக்கு நெகட்டிவ் இமேஜ் உருவாகி இருந்தது. அதை வைத்து தான் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சோக கதையை சொல்லி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+