பிக் பாஸ் 8: இந்த வாரம் அவங்கள அன்பா விசாரிக்கலாமா? குதர்க்கமாக பேசும் விஜய் சேதுபதி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் அக்டோபர் 19ஆம் தேதிக்கான எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் விஜய் சேதுபதி இந்த வாரம் முழுக்க நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் பேச வந்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகும் நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல விஜய் சேதுபதி வரும் ப்ரோமோ இப்போதுதான் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் நிகழ்ச்சியை பார்க்காத ரசிகர்கள் கூட வார இறுதி நாட்களை பார்ப்பதற்கு விருப்பப்படுவார்கள். காரணம் அந்த வாரம் முழுக்க நடந்த நிகழ்வுகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தான் பஞ்சாயத்து நடக்கும்.

இதற்கு முன்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் போதும் இதே நடைமுறைதான் நடைபெற்றது. இப்போது விஜய் சேதுபதி வந்து பிறகும் இதுதான் நடைபெறுகிறது. ஆனால் விஜய் சேதுபதி கமல்ஹாசனை போல இல்லை என்று சொல்வதற்காக முதல் நாள் இருந்தே தன்னுடைய வித்தியாசமான விளையாட்டை விளையாடி வருகிறார். போட்டியாளர்களை விடவும் இந்த சீசனில் விஜய் சேதுபதிக்கு தான் அதிகமாக வரவேற்பு இருக்கிறது. வழக்கத்தை விட அதிகமாக விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டதால் ரசிகர்கள் மத்தியில் சலிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அதே நேரத்தில் பலருக்கும் பரீட்சையமான முகங்களாக இந்த சீசனில் அதிக போட்டியாளர்கள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் இயல்பாக இருக்கிறது. முதல் வாரம் முழுக்க போட்டியாளர்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அழுது ஆர்ப்பாட்டம் செய்து கேமராவை நம் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக ஆண்கள் அணியினரும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். அதனால் கடந்த வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் போட்டியாளர்களை பேசவிடாமலேயே விஜய் சேதுபதி அதிரடி காட்டி இருந்தார்.
இந்த நிலையில் இந்த வாரம் இரண்டாவது வாரம் என்பதால் இன்று விஜய் சேதுபதி என்ன பேசப்போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த வாரத்தில் போட்டியாளர்களின் விளையாட்டு சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. பல டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுபோல ஒரு சில போட்டியாளர்களின் சோக கதைகள் வெளியே தெரிய தொடங்கி இருக்கிறது.
இன்று சனிக்கிழமை எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில் விஜய் சேதுபதி, "முதல் வராம் ஏன்டா இப்படி விளையாடுறாங்கன்னு இருந்துச்சு. அதனால என்ன ஏதுன்னு கூப்பிட்டு விசாரிச்சோம். ஆனா இப்போ என்னடா இப்படி எல்லாம் விளையாடுறாங்கன்னு இருக்கு. இங்க இருந்தவங்க இங்க போயிட்டாங்க (கைகளில் முதலில் சின்னதாகவும் பிறகு பெரியதாகவும் சைகை காட்டுகிறார்) இன்னும் இவங்க இவ்ளோ போகனும்.
இன்று இரவு என்ன ஏதுன்னு கொஞ்சம் கூப்பிட்டு அன்பா விசாரிப்போமா? என்று பேசி இருக்கிறார். போன வாரமே யாருக்கும் தயவு தாச்சனை இல்லாமல் முகத்துக்கு நேராக பேசி போட்டியாளர்களை கதி கலங்க வைத்திருந்தார். இந்த வாரம் என்ன செய்ய காத்திருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ப்ரோமோவில் எகிற வைத்திருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications