பிக் பாஸ் 8: 2வது நாளே நடந்த உச்சகட்ட சண்டை.. கெத்து காட்டிய ஆண்கள்.. கதறி அழுத பவித்ரா
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் அக்டோபர் எட்டாம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இதில் பெண்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் நடிகை பவித்ரா ஜனனி கதறி அழுது இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து போட்டியாளர்களுக்குள் சண்டை சச்சரவுகள் தொடங்கி விட்டது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் பெண்கள் தனியாகவும், ஆண்கள் தனியாகவும் விளையாடுகிறார்கள். இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண் பெண் பேதம் இல்லை என்று எல்லோரும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் கடந்த சீசனில் பிரதீப்புக்கு எதிராக பெண்கள் உமன்ஸ் கார்டு தூக்கியதன் காரணமாகவோ என்னவோ இந்த சீசனில் நடு வீட்டிற்குள் கோடு போட்டு பெண்கள் ஒரு பக்கமும் ஆண்கள் ஒரு பக்கமும் வைத்து போட்டியாளர்களை முட்டி மோத வைத்திருக்கிறார்கள்.
முதல் நாளில் எந்த பக்கம் பெண்கள் இருக்க வேண்டும், எந்த பக்கம் ஆண்கள் இருக்க வேண்டும் என்று பிக் பாஸ் கொளுத்தி போட அதை வைத்து இப்ப வரைக்கும் பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. முதல் பிரச்சனை முடிவதற்கு முன்பே அடுத்த பிரச்சனையை இன்று பிக் பாஸ் தொடங்கிவிட்டார். அதாவது ஆண்கள் அணியில் இருக்கும் ஒரு போட்டியாளர் ஆண்கள் சார்பாக பெண்கள் வீட்டிற்குள் செல்ல வேண்டும், பெண்கள் அணியில் இருந்து ஒரு பெண் போட்டியாளர் ஆண்கள் வீட்டிற்குள் சென்று போட்டியிட வேண்டும் என்று டாஸ்க் கொடுத்து இருக்கிறார்.
ஏற்கனவே நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து ஆண்கள் எல்லோரும் ஒற்றுமையாகவே செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் பெண்களுக்குள் கொஞ்சம் கூட ஒற்றுமை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதை நேற்று பவித்ரா மற்றும் தர்ஷிகா இருவரும் வெளிப்படையாகவே பேசி இருந்தனர். வெளியே இருப்பது போலத்தான் பெண்கள் இங்கேயும் ஒருவருக்கு ஒருவர் போட்டியாக நடந்து கொள்கிறார்கள், ஒருவர் சொன்னதை ஒருவர் கேட்காமல் வீம்பு பிடிக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று அதே பவித்ராவே சக போட்டியாளர்களோடு சண்டை போட்டு இருக்கிறார்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் வீட்டிற்கு செல்வதற்காக பெண்களில் யாரை போக வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஜாக்குலினை அனுப்ப முடியாது என்று சுனிதா சொல்ல ஜாக்குலின் அழுது கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பவித்ராவை அனுப்பலாம் என்று சிலர் சொல்லி இருக்கிறார்கள்.
முதலில் சிலர் பவித்ராவை ஆண்கள் வீட்டிற்குள் அனுப்பலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பிறகு சிலர் அதற்கு ஒத்து வராததால் ஓட்டு வைத்து பவித்ராவை அனுப்பலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று முடிவெடுக்க இதை பவித்ரா ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
அதற்கு ஜாக்குலின் இதற்கு முன்பு நீங்கள் என்ன சொன்னீங்க பவித்ரா அங்கே போனால் ஆண்கள் பாவம் பாப்பாங்க என்று சொன்னீங்களே என்று போட்டுக் கொடுக்க, அதைப் பிடித்துக் கொண்ட பவித்ரா, எனக்கு பாவம் பாப்பாங்கன்னு நீங்க சொன்னீங்களா? என்று ஜாக்குலினிடம் கோபமாக பேசுகிறார். அதை கண்டுகெள்ளாத மாதிரியே ஜாக்குலின் ரியாக்ட் செய்ய இதனால் கோபமான பவித்ரா நான் போனால் அங்கே ஜெயிச்சிடுவேன் என்று நம்பிக்கை இருந்தால் மட்டும் என்ன அனுப்புங்க.
நான் போனா எனக்கு அவங்க பாவம் பாப்பாங்கன்னு நினைச்சா யாரும் என்னை அனுப்ப வேண்டாம் என்று கோபப்பட்டு பேசிவிட்டு போய் அழுது கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே பெண்களுக்குள் இவ்வளவு அக்கப்போர் என்றால் இனி இந்த சீசன் முழுக்க என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications