பிக் பாஸ் 8: சௌந்தர்யாவை தொடர்ந்து ஜாக்குலினுக்கு கட்டம் கட்டும் சுனிதா.. அம்பலப்படுத்திய பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் பத்தாம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் ஜாக்குலின் பற்றி சுனிதா மற்றும் அன்ஷிதா இருவரும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு மைண்ட் கேம் தான் இந்த நிகழ்ச்சியில் தாங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும் சுற்றி இருப்பவர்கள் மீது சந்தேகப்பட்டு அவர்களிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். வெளியே இருக்கும் பலர் கூட இந்த நிகழ்ச்சியில் நான் இருந்திருந்தால் அப்படி செய்திருப்பேன், இப்படி செய்திருப்பேன் என்று சொல்லலாம் ஆனால் அந்த இடத்திற்கு போன பிறகு அவர்களின் நிலைமை மாறிவிடும் என்பது ரவீந்தர் மூலமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.

ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் இருந்து ஏழாவது சீசன் வரைக்கும் ரிவ்யூ செய்து இருக்கிறார். ஒவ்வொரு சீசனிலும் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் இவர்கள் இப்படித்தான் அவர்கள் அப்படித்தான் என்று தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு சில இடங்களில் அவரும் சறுக்கி கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் போட்டி போடுகின்றனர். அதில் ஆண்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். ஆனால் பெண்களுக்குள் தான் ஒற்றுமை இல்லை ஆரம்பமான முதல் நாளிலிருந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக வந்த ஜாக்குலின் அவர் வருவதற்கு முன்பு பெண் போட்டியாளர்கள் எடுத்த முடிவு தவறு என்று அன்றிலிருந்து தன்னுடைய வாக்குவாதத்தை தொடங்கிவிட்டார்.
நிகழ்ச்சிக்குள் இப்போது தானே வந்திருக்கிறோம் கொஞ்சம் ஆற அமரா பேசலாம் என்று கூட அவர் நினைக்காமல் வந்ததும் வராததுமாக என்னுடைய உரிமைகளை நீங்கள் பறிக்கிற மாதிரி எப்படி எனக்கு முன்பே நீங்கள் முடிவு எடுக்கலாம் என்று போர் கொடியை தூக்கி இருந்தார். அதாவது பெண்கள் பல வசதி உள்ள அறைகளை தேர்ந்தெடுத்து இருந்தனர் அந்த அறைகளை நாங்கள் தியாகம் செய்ய வேண்டும் என்றால் ஆண்கள் சொல்லும் ஒரு வாரத்தில் ஆண் போட்டியாளர்கள் யாரையும் பெண்கள் நாமினேஷன் செய்யக்கூடாது என்று சொல்லி இருந்தனர்.
அதை ஆரம்பத்தில் வந்த போட்டியாளர்கள் சரி என்று ஒத்துக்கொண்டனர். ஆனால் ஜாக்குலின் அந்த முடிவு தவறு என்று சண்டை போட தொடங்கியிருந்தார். அப்போதிலிருந்து இப்ப வரைக்கும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார். நேற்று கூட ஆண்கள் பிராங்க் சண்டை போட்டிருந்தனர் அதற்கு சண்டையை விலக்கிவிட்ட ஜாக்குலின் அதிகமாக கோவப்பட்டு இருந்தார்.
அதுபோல பெண்கள் சார்பாக ஆண்கள் வீட்டிற்குள் நான்தான் போவேன் என்றும் அடம்பிடித்தார். ஆனால் பெண் போட்டியாளர்கள் அவரை தேர்வு செய்யவில்லை இதுவும் அவருக்கு பெரும் வருத்தத்தை கொடுத்திருந்தது. இது போதாது என்று சுனிதா மற்றும் ஜாக்குலின் இருவருக்கும் இடையே அடிக்கடி முட்டி மோதிக் கொண்டிருக்கிறது.
இதை வைத்து இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அன்ஷிதா மற்றும் சுனிதா இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜாக்குலின் சண்டை போட்டு பேமஸ் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார் அவர் நார்மலாக பேசுவது கூட சண்டை போடுவது போலவே இருக்கிறது. அது பார்க்கிறவஙகளுக்கு ஜாக்குலின் பேசுறது சண்டை போடுற மாதிரியே இருக்கிறது அது அவளோட நேச்சுரல் அதனால பிற்காலத்தில் நானும் அவளும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் இருக்குற மாதிரி இருந்தா கூட நான் அவளிடம் பேசமாட்டேன், தள்ளியே இருப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இந்த காட்சிகள் தான் இப்போது ப்ரோமோவில் இருக்கிறது. ஏற்கனவே இரண்டாவது ப்ரோமோவில் என்னால் கத்தி பேச முடியாது என்று சௌந்தர்யா சொல்ல அதற்கு சுனிதா சௌந்தர்யாவிடமும் ஏன் உனக்கு பேச தெரியாதா? நீ சொல்றத நாங்க நம்பனுமா? என்று நக்கல் செய்திருந்தார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒன்றும் தெரியாதது போலவது போல பேசிக் கொண்டிருப்பார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தவர்களை டார்கெட் செய்து அடிக்கிறார். இதில் எது உண்மையான முகம் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications