பிக் பாஸ் 8-ல் இத்தனை பேர் வரப்போகிறார்களா? அதுவும் இவர்களுமா? கசிந்த லிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் பல விஜய் டிவி பிரபலங்கள் இருக்கின்றனர். அதுபோல சமூக வலைத்தளத்தில் பிரபலங்களாக இருப்பவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக பெயர் வெளியாகி இருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் இதுவரைக்கும் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அடுத்து எட்டாவது சிகிச்சை தொடங்கப்படுவதற்கு முன்பே பஞ்சாயத்து வந்துவிட்டது. கமல்ஹாசன் இதுவரைக்கும் தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால் இந்த முறை தான் ஏற்கனவே கமிட்டான திரைப்படங்களில் நடிக்க இருப்பதால் இந்த சீசனில் கலந்து கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து அடுத்ததாக யார் எட்டாவது சீசனில் தொகுப்பாளராக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

அதில் சூர்யா, சிம்பு, அரவிந்த்சாமி, சரத்குமார், நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பலருடைய பெயர்கள் அடிபட்டனர். ஆனாலும் தற்போது இறுதியாக விஜய் சேதுபதியின் பெயர் தான் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
பிக் பாஸ்-க்கு டாடா காட்டிய கமல்ஹாசன்.. திடீர் பதிவுக்கு நிஜ காரணம் இதுவா? அவருக்கு பதிலாக யார்?
இதில் பலர் கலந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஒவ்வொரு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பும் இப்படித்தான் உத்தேச பட்டியல் வெளியாகும். அதில் இருப்பவர்கள் பலர் அந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போதைய சீசனின் உத்தேச பட்டியலில் வெளியானவர்களின் முதலிடத்தில் இருப்பது நடிகர் அருண் பிரசாத். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனாவின் காதலர் என்று இணையத்தில் ஏற்கனவே செய்திகள் பரவி வரும் நிலையில் அவரை இந்த முறை களம் இறக்க முயற்சி செய்து வருகிறார்கள். அவரைத் தொடர்ந்து டிடிஎஃப் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஷாலின் சோயா. இருவரும் ஜோடியாக கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் வில்லியாக நடித்த நடிகை ஃபரீனா பெயர் இருக்கிறது. அடுத்ததாக விஜய் டிவி தொகுப்பாளர்களில் ஒருவரான மாகாபா இந்த முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அதுபோல கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ராமருடைய பெயரும் இருக்கிறது.

இவரைத் தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் பாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் "காத்து மேல" பாடல் மூலம் அதிகம் கவனம் பெற்ற பால் டப்பா மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் இருப்பதாக இருக்கிறது. இறுதியாக சமூக வலைதளத்தில் செம ஆக்டிவாக இளம் ரசிகர்களை கவர்ந்து வரும் அமலா ஷாஜி பெயரும் இருக்கிறது. பொதுவாக பிக் பாஸில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லுவார்கள் பிக் பாஸில் இந்த லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்கள் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications