பிக் பாஸ் 8: பவித்ரா எடுத்த பெரிய ரிஸ்க்.. 2 லட்சம் பெட்டி.. கடைசியில் ட்விஸ்ட்.. இது எதிர்பார்க்காதது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் பவித்ரா 2 லட்சம் டாஸ்க்கில் ஜாக்குலின் தடுத்தும் விளையாடி இருக்கிறார். அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில வாரங்களிலேயே சுவாரஸ்யம் குறைவாக இருந்தது. அதற்காகவே இந்த சீசனில் ஏதாவது செய்து பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கிரியேட்டிவ் டீம் அதிகமாக யோசித்து பல டாஸ்க் கொடுக்கிறார்கள்.

bigg boss tamil television bigg boss tamil 8

ஆனாலும் இந்த சீசனில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் டாஸ்கை சரியாக விளையாடாமல் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது மேலும் சுவாரஸ்யத்தை குறைத்து வருகிறது என்று சிலர் கூறிவரும் நிலையில் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சிக்கு பெரிய பிளஸ் ஆக இருக்கிறார். அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவடைய இருக்கிறது.

நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த ஆறு போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். அதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வென்று நேரடியாக பைனலுக்கு சென்று இருக்கிறார்.

bigg boss tamil television bigg boss tamil 8

அதுபோல எல்லா சீசன்களிலும் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படும் ஆனால் இந்த சீசனில் மட்டும்தான் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படவில்லை. இதனால் போட்டியாளர்கள் ஏமாற்றத்தில் இருந்த நேரத்தில் இந்த வாரத்தில் வித்தியாசமாக பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது அதிக தொகையில் பணத்தை பெட்டியில் வைத்தால் எளிமையாக யாராவது எடுத்துக்கொண்டு சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு டாஸ்க் கொடுக்கிறார்கள்.

ஒரு அறையில் பணப்பெட்டியை வைத்து அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கி வரவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வரவில்லை என்றால் அவர்கள் எவிக்ஷன் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதில் முதலாக முத்துக்குமரன் துணிச்சலாக களம் இறங்கி இருந்தார்.

அவரை தொடர்ந்து ரயான் 2 லட்சம் பெட்டி எடுத்துக்கொண்டு வந்திருந்தார். அடுத்ததாக வைக்கப்பட்ட இரண்டு லட்சம் பெட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்று சொன்னதும் பவித்ராவும் ஜாக்குலினும் போட்டி போடுகிறார்கள். அப்போது பவித்ரா ஜாக்குலினிடம் நான் இந்த விளையாட்டை விளையாடி என்னால் ஜெயிக்க முடியவில்லை என்றால் கூட நான் சந்தோசமாக வெளியே போவேன்.

bigg boss tamil television bigg boss tamil 8

காரணம் என் விளையாட்டில் வெளியே போவதற்கு முன்பு எதையாவது செய்து விட்டு போக வேண்டும் அதுதான் என்னுடைய குறிக்கோள் என்று சொல்ல, ஜாக்குலின் சரி என்று விலகி விடுகிறார். பிறகு பவித்ரா ஓடி சென்ற பெட்டியை தூக்கிக்கொண்டு கடைசி நொடியில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். இதனால் பவித்ரா 2 லட்சம் பணத்தை தன்னுடைய மொத்த பணத்துடன் சேர்த்து இருக்கிறார்.

அதே நேரத்தில் அவர் மீண்டும் நிகழ்ச்சியில் தொடர்கிறார். இதில் இப்ப வரைக்கும் விளையாடியதில் சௌந்தர்யா மட்டும்தான் பாதி வரைக்கும் ஓடிவிட்டு என்னால் முடியாது என்று திரும்ப வந்திருக்கிறார். ஆனால் பவித்ராவை தொடர்ந்து விளையாடிய ஜாக்லின் குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே வராததால் அவர் எலிமினேட் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே பவித்ரா மூன்று முறை தலைவர் பதவிக்காக போட்டி போட்டார். ஆனால் அவருக்கு கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இரண்டு முறை அவர் தோல்வி அடைந்தார். மூன்றாவது முறை அவர் முத்துக்குமரனை வெற்றி பெற்று கொண்டாலும் அந்த வாரத்தில் இருந்து தான் தலைவர் பதவிக்கு இனி போட்டிகள் கிடையாது என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இத்தனை முறை தோல்விகள் அடைந்து வந்த பவித்ரா தன்னுடைய தன்னம்பிக்கையை இழக்காமல் மீண்டும் போட்டியிட்டு இரண்டு லட்சம் பணத்தை வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+