பிக் பாஸ் ரசிகர்களின் மனதை நொறுக்கிய காட்சி! அதிரடியாக வந்த EX போட்டியாளர்! காதலை அறிவித்த சௌந்தர்யா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 27ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் 7வது சீசனில் போட்டியாளராக இருந்த விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அவரிடம் சௌந்தர்யா தன்னுடைய காதலை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து கொண்டிருக்கின்றனர். நேற்றோடு போட்டியாளர்களின் பெற்றோர் நண்பர்கள் வந்து முடிந்தனர். இந்த நிலையில் இன்று பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்று நேற்றே செய்திகள் வெளியானது.

Television Bigg Boss Tamil 8 Bigg Boss 8 8

அதாவது இந்த சீசனில் உள்ளே இருக்கும் சில போட்டியாளர்களுக்காக அவருடைய நண்பர்களும், காதலர்களும் வரப்போகிறார்கள் என்று கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சௌந்தர்யாவின் காதலரான விஷ்ணு வந்திருக்கிறார்.

விஷ்ணு ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிசயமானவர்தான். ஆபீஸ் சீரியல் முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் வரை பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் இருந்தார். வார நாட்களில் எல்லாம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் விஷ்ணு வார இறுதியில் அமைதியின் சொரூபமாக மாறி ஏழாவது சீசனில் கடைசி வரைக்கும் இடம் பிடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர் உடைந்து போய் இருந்த சமயத்தில் அவருக்காக சௌந்தர்யா வீடியோ காலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசி இருந்தார். அப்போது கூட நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டார்கள். ஆனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஆரம்பத்திலிருந்து செய்திகள் பரவி வந்தது. அதை இன்று முதல் ப்ரோமோவில் உறுதி செய்து இருக்கிறார்கள்.

Television Bigg Boss Tamil 8 Bigg Boss 8 8

சவுந்தர்யாவிற்காக விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அவரை பார்த்ததும் சௌந்தர்யா "marry me" என்று கிரீமில் ஒரு பிளேட்டில் எழுதி கொடுக்கிறார். என்னை கல்யாணம் செய்கிறீர்களா? என்று சௌந்தர்யா விஷ்ணுவிடம் கேட்க அதை ஏற்றுக்கொண்ட விஷ்ணு என்னுடைய வாழ்க்கையில் இந்த மாதிரி சம்பவம் இதுவரைக்கும் நடந்ததே இல்லை என்று விஷ்ணு சொல்ல சௌந்தர்யா என் வாழ்க்கையிலும் இதுபோல நடக்கலடா என்று சிரித்தபடியே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

Television Bigg Boss Tamil 8 Bigg Boss 8 8

இந்த க்யூட்டான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது போன்று எந்த போட்டியாளரின் காதலரும் உள்ளே வந்தது கிடையாது. இதுதான் முதல் முறையாக நடக்கிறது. அதேபோல சௌந்தர்யாவை தொடர்ந்து அருணுக்காக அர்ச்சனாவும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இதனால் இன்றைய எபிசோடு செமையாக இருக்கப் போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+