ராணவ் அதிரடியாக வெளியேற்றப்பட காரணம் இதுதானா? இதுதான் வாயை கொடுத்து மாட்டிக்கிறதா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடில் ராணவ் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்றும் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் அதை தொடர்ந்து 6 வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

ஆனால் நிகழ்ச்சி 90 வது நாளை நெருங்கிவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் முடிவடைய இருப்பதால் இந்த வாரத்திலும் இரண்டு எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரத்திலும் அதற்கு முந்தின வாரத்திலும் இரண்டு போட்டியாளர்கள் எவிக்ஷன் செய்யப்பட்டு இருந்தார்கள்.
அந்த வரிசையில் இந்த வாரத்தையும் பின்பற்ற போவதாக கூறப்படுகிறது. அதுபோல அடுத்த வாரத்தில் மணி டாஸ்க் நடைபெறும். அதனால் பணப்பெட்டியை யார் எடுக்கலாம்? இந்த முறை எவ்வளவு பணம் பெட்டியில் வைக்கப்படும் என்று போட்டியாளர்களுக்குள் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனாலேயே இந்த வாரத்தில் அதிரடியாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. அதில் இன்றைய எபிசோடில் ராணவ் எவிக்ஷன் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. நாளை மஞ்சரி வெளியேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதுபோல வாக்குகளின் அடிப்படையில் நேற்று வரைக்கும் வெளியான தகவலின் படி ராணவ் சேவ் ஆகத்தான் இருந்தார். ஆனால் அவர் இன்று வெளியேற்றப்படுவதற்கு காரணம் அவர் கடந்த வாரத்தில் பேசியதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அவர் ஒரு இடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது நான் பவித்ராவிடம் ஒரு கண்டன்ட் செய்யப் போகிறேன்.
அதாவது லவ் கன்டெண்ட். பவித்ரா பின்னாடி சுற்றிக்கொண்டு இருப்பேன் ஆனால் அவர் வெளியே போகும் போது அக்கா என்று சொல்லி விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். அதனால் ராணவ் வெளியேற்றப்படுகிறாரா? என்றும் கேள்விகள் எழுகிறது. அதுபோல இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நிகழ்ச்சி இருக்கும் நிலையில் எந்த அளவிற்கு கண்டன்ட் கொடுக்கிறார்களோ அந்த போட்டியாளர்களை மட்டும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே வைத்திருப்பார்கள்.
கடந்த வாரத்தில் ராணவ் சில இடங்களில் சரியாக விளையாடி இருந்தாலும் சில இடங்களில் அவரால் விளையாட்டு கெடுகிறது என்று உள்ளிருக்கும் எல்லா போட்டியாளர்களும் சொல்லி வருகிறார்கள். அதுபோல ராணவிற்கு பி ஆர் டீம் வேலை பார்க்கிறார்கள் என்றும் குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது.
இதனால் கூட வாக்குகள் பிஆர் வைத்து போட்டு இருப்பார்கள் என்று ராணவ் வெளியேற்றப்படுகிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த வாரத்தில் மஞ்சரியோடு பவித்ரா அல்லது அருண் வெளியேறப் போகிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது ராணவ் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதற்கு காரணம் பவித்ரா ஆரம்பத்திலிருந்து வருகிறார் எல்லா டாஸ்க்குகளிலும் போராடிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் இவர் அடுத்த வாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக கூட இப்படி கேம் சேஞ்ச் செய்யப்பட்டு இருக்கிறதா? என்றும் கேள்விகள் எழுகிறது. ஏற்கனவே ராணவ் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் திரையில் வெளியாக இருக்கிறது.
அதற்கு முன்பு தன்னை பிரபலமாகி கொள்ள வேண்டும் என்று ராணவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவருடைய குடும்பத்தினர் கூறி இருக்கிறார்கள். அதுபோல ஏற்கனவே நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு போராடிக் கொண்டு இருந்தார்.
ராணவிற்கு இந்த சீசன் வாய்ப்பு வந்ததும் கண்டிப்பாக இதில் கலந்து கொள்வேன் என்று பலருடைய அறிவுரையும் கேட்காமல் கலந்து கொண்டிருக்கிறார் என்று நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ராணவ் பெரிய அளவில் பிரபலமாகாமல் இருந்தாலும் ஒரு சில வாரங்களிலேயே தன்னுடைய தனி விளையாட்டு மூலமாக மக்கள் மத்தியில் இவரை பேச வைத்து விட்டார்.
உள்ளிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் இவரை ஒதுக்கி வைத்த போது இவர் தனக்கு தானே சப்போர்ட் செய்து விளையாடியது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த வாரத்தில் இவர் வெளியேற்றப்படுவது சரி என்று ஒரு தரப்பினர் பேசி வருகிறார்கள். இன்னொரு தரப்பினர் இது அன்ஃபேர் என்று கூறி வருகிறார்கள். ஆனால் ராணவ் வெளியேற்றப்படுவது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது இது தவறு என்று நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தை தட்டி விடுங்க.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications