ரஞ்சித் வெளியே செல்லும்போது பிக் பாஸ் கொடுத்த மறக்க முடியாத கிப்ட்.. இது வேற லெவலில் இருக்கே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் இருந்து 77வது நாளில் ரஞ்சித் எவிக்ஷனாகி இருக்கிறார். அவர் வெளியே செல்லும்போது அவருக்கு பிக்பாஸ் எதிர்பார்க்காத கிப்ட் கொடுத்து இருக்கிறார். அதைப் பார்த்த ரஞ்சித் பரவசம் அடைந்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. 77 நாட்களைத் கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்த பல போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு கொண்டே இருக்கிறார்கள். அதிலும் நேற்றைய எபிசோடில் ரஞ்சித் வெளியேற்றப்பட்டார்.

இந்த சீசனில் அதிக வயதுடைய போட்டியாளராக ரஞ்சித் தான் இருந்தார். ஒவ்வொரு சீசனிலும் அதிக வயதுடைய போட்டியாளர்கள் தான் முதல் சில வாரங்களிலேயே வெளியேறி வருவதை பார்த்து இருப்போம். ஆனால் ரஞ்சித் இத்தனை நாட்கள் இந்த நிகழ்ச்சியில் தாக்கு பிடித்தது அதிசயம் தான்.
ரஞ்சித் சக போட்டியாளர்களோடு போட்டியிட்டு தன்னால் எந்த அளவிற்கு விளையாட முடியுமோ அந்த அளவிற்கு விளையாடி கொண்டு இருந்தார். ரஞ்சித் எந்த டாஸ்க்கு வந்தாலும் அதில் என்னால் முடியாது என்று ஒதுங்கி இருக்காமல் அங்கிருந்த இளம் போட்டியாளர்களோடு போட்டி போட்டு விளையாடியது வெளியே இருந்த ரசிகர்களையும் வியப்படைய வைத்திருந்தது. அது குறித்து உள்ளிருக்கும் போட்டியாளர்கள் கூட பல இடங்களில் ரஞ்சித்தை பாராட்டி இருந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ரஞ்சித் இயக்கி நடித்த கௌண்டம்பாளையம் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு அதிகமான நெகட்டிவ் இமேஜ் உருவாகி இருந்தது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய இயல்பான கேரக்டரை பார்த்ததும் இவர் கேரக்டர் இதுதானா என்று இவருக்கு அதிகமான ஆதரவு வந்தது. அதுபோல நேற்று ரஞ்சித் வெளியேற்றத்தின் போது அவருடைய மனைவி பிரியா ராமன் அவருக்காக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் ரஞ்சித் எவிக்ஷன் என்று விஜய் சேதுபதி அறிவித்ததும் உள்ளே இருந்த எல்லா போட்டியாளர்களும் அவரை மிஸ் பண்ணுவதாக பேசியிருந்தனர். அதுபோல ரஞ்சித்துக்கு அம்மா என்றால் ரொம்ப பிடிக்கும் என்பதற்காக ஜெஃப்ரி அம்மா பாடல் ஒன்றை பாடினார். அதோடு அந்த வீட்டின் இந்த வார தலைவராக இருந்த விஷால் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்களின் சார்பாக ஒரு சால்வை அணிவித்தார்.
அதற்குப் பிறகு ரஞ்சித்துக்காக பிக் பாஸ் மெமரபில் பிரைஸ் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் சிலர் குழுவாக வில்லுப்பாட்டு படிப்பது போன்ற போட்டோ அச்சிடப்பட்டுள்ளது. ரஞ்சித் ஒரு நடிகராக இருந்தாலும் நல்ல இயக்குனர் என்பதை அடையாளப்படுத்த எல்லா இடங்களிலும் அவர் ஆசைப்படுகிறார்.
ரஞ்சித்தின் ஆசைக்காக அவருக்கு மறக்க முடியாத நினைவாக அந்த வில்லுப்பாட்டு புகைப்படம் கொடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை பார்த்ததும் ரஞ்சித் இதை என்னுடைய வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாது. எனக்கு பிடித்த கலை மூலமாக என்னை அங்கீகரித்தது எனக்கு சந்தோஷம் என்று எமோஷனலாக பேசியிருந்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications