பிக் பாஸ் 8 வீட்டில் ஆண்களை கதறவிடும் ரஞ்சித்.. அட பாவமே இப்படி பண்ணி வச்சிருக்கீங்களே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கான எபிசோடின் இரண்டாவது ப்ரோமோவில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் கோபமாக மோதிக்கொண்ட காட்சிகள் இருந்தது. இதை பார்த்ததும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை இவர்கள் இருவருக்கும் இவ்வளவு பெரிய வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது, இவர்களில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி வழக்கமான நிகழ்ச்சிகளை விட அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கமல்ஹாசன் வெளியேறி இருந்தார். அதற்கு பிறகு விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்றதும் விமர்சனங்கள் அதிகமாக எழுந்து வந்தது. கமல்ஹாசனை போல விஜய் சேதுபதியால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு போக முடியுமா? என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

விஜய் சேதுபதி முதல் நாள் எபிசோடில் தன்னை பற்றி வந்த நெகட்டிவ் கமெண்ட்களுக்கு பதிலடி கொடுத்துவிட்டார் .அதுபோல மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் அதிகமாக விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் மக்களுக்கு இவர்களை ஏற்கனவே தெரிந்த முகமாகத்தான் இருக்கிறார்கள். அதுபோல இந்த வீட்டிற்குள் கோடு போட்டு ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் போட்டியிடுகின்றனர்.
ஆண்கள் அணியில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். பெண்கள் அணியில் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து சண்டைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்று வெளியான இரண்டு ப்ரோமோக்களிலும் ஆண்கள் அணியில் இருந்து சண்டை போடுவது போன்று தான் காட்சிகள் இருந்தது. இதை பார்த்ததும் பெண்களைப் போல ஆண்களும் அடித்துக் கொள்ள தொடங்கி விட்டார்கள் என்று தான் ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் அது எல்லாமே ஸ்கிரிப்ட் என்பது 24 மணி நேர எபிசோடில் இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. இன்று காலை பிக் பாஸ் ரஞ்சித்தை கூப்பிட்டு ஒரு டாஸ்க் கொடுத்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் எல்லோரும் ஜாலியாக சுற்றுலாவுக்கு வரவில்லை நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றுங்கள் என்று கூறியிருந்தார். அதுபடி தான் விஜே விஷால் மற்றும் ஜனனி இடையே சண்டை போல ஆண்கள் அணியில் நடித்திருக்கிறார்கள்.
ஹிந்தி பிக் பாஸில் ஸ்ருதிஹா பேசிய தமிழ் வார்த்தை.. அடுத்து நடந்த ட்விஸ்ட்! கொண்டாடும் ரசிகர்கள்
அதுபோல ரவீந்தர் மற்றும் ரஞ்சித் சண்டை போட்டது கூட ஸ்கிரிப்ட் தான். இந்த சண்டைக்கு முக்கிய காரணமாக கதை சொல்லிக் கொடுத்தது எல்லாமே ரஞ்சித் தான். ரஞ்சித் கதை சொல்ல அதைக் கேட்டு ஆண்கள் அணியில் இருந்த எல்லா போட்டியாளர்களும் வயிறு வலிக்க விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
ரஞ்சித் எத்தனையா திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் கடைசியாக அவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் மூலமாக அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அவர் பூமர் என்று அவரை பலரும் திட்டி வருகிறார்கள். ஆனால் இன்றைய எபிசோட்டில் அவர் அதிகமான காமெடி செய்து இருக்கிறார். அவருடைய நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷனை பார்க்கும்போது சிரிக்காதவர்கள் கூட சிரித்து விடுவார். அந்த அளவிற்கு பக்காவா என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடில் இந்த காட்சிகள் முழுமையாக வருமா என்று தெரியவில்லை. ஆனாலும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர எபிசோடில் ஆண்கள் அணியில் ரஞ்சித் தலைமையில் நடந்த நாடக ஒத்திகை அருமையாக இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications