பிக் பாஸ் 8: முதல் போட்டியாளர் ரவீந்தர்.. ரிவ்யூ செய்து எவ்ளோ பணம் சம்பாதிச்சீங்க? விளாசிய சேதுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று அக்டோபர் 6இல் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. அதில் முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் கலந்து கொண்டு இருக்கிறார். அவரிடம் விஜய் சேதுபதி நீங்க இத்தனை சீசனாக ரிவ்யூ செய்து எவ்வளவு சம்பாதிச்சீங்க? என்று கேட்டிருக்கிறார். அதோடு கைதட்டிய மக்களையும் விளாசி இருக்கிறார்.

அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இப்போது தொடங்கி இருக்கிறது. அதில் ஏற்கனவே நாம் சொன்னபடியே ரவீந்தர் முதல் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவரை மேடைக்கு வரவேற்ற விஜய் சேதுபதி நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து இருக்கீங்களே என்று கேட்க அதற்கு ஆமாம் என்று ரவீந்தர் சொல்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8

பிக் பாஸ் நிகழ்ச்சியை வச்சு நிறைய பேரு சம்பாதிக்கிறீங்க. நீங்க ரிவ்யூ செய்து எவ்வளவு சம்பாதிச்சு இருக்கீங்க என்று கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் ரவீந்தர் நிற்கிறார். பிறகு ரவீந்தரிடம் நீங்கள் இங்கே வந்துட்டீங்களே அப்போ யாரு ரிவ்யூ பண்ண போறாங்க என்று கேட்க அதற்கு ரவீந்தர் நான் ரிவ்யூ செய்தால் நன்றாக இருக்கும் என்று பலர் நினைக்கிறார்கள், நான் ஆதாயத்திற்காக ரிவ்யூ செய்யவில்லை.

அதேபோல யாரையும் தரம் தாழ்த்தி ரிவ்யூ செய்யவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும்போதே நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதிலை சொல்லாமல் சுற்ற விட்டு பதில் சொல்றீங்க என்று விஜய் சேதுபதி கேட்க, அதற்கு ரவீந்தர் சிரித்து சமாளிக்கிறார். அதற்கிடையில் மக்கள் அடிக்கடி கைதட்டி கொண்டிருக்கும் போது பேசுறவங்களை பேச விடுங்க இப்படி சும்மா சும்மா கை தட்டாதீங்க என்று கண்டிக்கிறார்.

பிறகு ரவீந்தரிடம் நீங்கள் உண்மையா சொல்லுங்கள் எதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கீங்க என்று கேட்கிறார். எல்லாரும் எப்படியோ பேமஸ் ஆயிட்டாங்க ஆனா இவரு இன்டர்வியூ கொடுத்தே பேமஸ் ஆகிட்டாரு என்று கிண்டல் செய்கிறார். பிறகு ரவீந்திரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனா நீங்க யாரை மிஸ் பண்ணுவீங்க என்று கேட்க, நான் என்னுடைய மனைவி, அம்மா, சாப்பாடு மூன்றையும் மிஸ் பண்ணுவேன் என்று ரவீந்தர் சொன்னதும் ரவீந்திரருடைய மனைவி மகாலட்சுமியை விஜய் சேதுபதி மேடைக்கு கூப்பிட்டு அவரிடமும் பேசுகிறார்.

பிக் பாஸ் 8: இந்த முறை பாய்ஸ் vs கேர்ள்ஸ் ட்விஸ்ட்! தொடங்கியது கொண்டாட்டம்.. ஆனால் ஆரம்பமே இப்படியா?
பிறகு ஏழு வருஷமா கமல் சார் பிக்பாஸ் நிகழ்ச்சி பண்ணியிருக்கிறார். அவரை வச்சு நீங்க ரிவ்யூ செஞ்சு இருக்கீங்க. இப்போ நான் அவருக்கு பதிலா வந்திருக்கிறேன் அப்போ என்னை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? எனக்கு என்ன அட்வைஸ் சொல்லனும்னு நீங்க நினைக்கிறீங்க? என்னை எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு செலக்ட் பண்ணுனாங்க என்று நினைக்கிறீங்க என்று கேட்க அதற்கு ரவீந்தர் எத்தனையோ பேர் இருந்தாலும் அந்த இடத்தில் நீங்கள் தனித்துவமாக சிறப்பாக இருப்பதால் தான் உங்களை இங்கே செலக்ட் பண்ணி இருக்காங்க.

அதுபோல நீங்க மக்கள் கைதட்டுவதை முழுமையாக நம்பிடாதீங்க. இவர்கள் ஒரு சில நேரங்களில் கைதட்டியே நம்மை குழப்பி விடுவாங்க என்று விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் கொடுக்கிறார் பிறகு ரவீந்தரை விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+