பிக் பாஸில் விதியை மீறிய போட்டியாளர்.. அதிரடியாக வெளியேற்றம்! இதுதான் வாயை கொடுத்து சிக்குவதா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்த ரவீந்தர் பேசிய வார்த்தைகளுக்காக அவரை அதிரடியாக பிக் பாஸ் வெளியேற்றி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்த வாரம் கிராண்ட் பினாலே நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அதற்குப் பிறகு ஆறு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் இப்போது 8 போட்டியாளர்கள் மட்டும் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறார்கள். அதுபோல இந்த வாரம் மணி டாஸ்க் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட போட்டியாளர்கள் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார்கள்.
நேற்றும் அதற்கு முந்தைய தினமும் சேர்த்து மொத்தம் எட்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். அதில் ரவீந்தரும் ஒருவர். ரவீந்தர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக உள்ளே சென்றார். அவர்தான் முதல் ஆளாக எவிக்ஷனாகி வெளியே வந்தது.
வெளியே வந்த பிறகு தன்னுடைய முழு சப்போர்ட் முத்துக்குமாரனுக்கு தான் அவர்தான் டைட்டில் ஜெயிக்கப் போகிறார் என்று அடித்து கூறி வந்தார். அதுபோல தற்போது ரீஎன்ட்ரி கொடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீந்தர் வெளியே நடக்கும் பல நிகழ்வுகள் குறித்து பிக் பாஸ் வீட்டிற்குள் பேசி இருக்கிறார். அது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இவர் இப்படி சொல்லிக் கொண்டிருந்தால் உள்ளிருக்கும் போட்டியாளர்களின் மனநிலை பாதிக்கப்படும் என்பது பலருடைய கருத்தாக இருந்தது. அதுபோல ரவீந்தர் சௌந்தர்யாவிடம் நீதான் இந்த நிகழ்ச்சியில் உண்மையாக இருக்கிறாய் வீட்டிற்கு எப்படி ஒரு பெண் அழகு சேர்ப்பாளோ அதுபோல நீ அந்த வீடாகவே இருக்கிறாய். என்றெல்லாம் வசனம் பேசி இருந்தார்.
இதனால் ரவீந்தரின் வருகை இந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு உத்வேகம் கொடுக்கிறது என்று சௌந்தர்யாவின் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் இந்த சீசனில் யார் டைட்டில் ஜெய்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது? யார் பண பெட்டி எடுக்கலாம்? எடுக்க கூடாது? என்றெல்லாம் ரவீந்தர் ரிவ்யூ வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து பிக்பாஸ் கடுப்பாகி இருக்கிறார்.
ரவீந்தரிடம் நீங்கள் வெளியே நடக்கும் நிகழ்வுகளை விதியை மீறி உள்ளே சொல்லிவிட்டீர்கள். அதனால் நீங்கள் வெளியே வரலாம் என்று அதிரடியாக தீர்ப்பு வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே அர்னவ் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகு உள்ளிருக்கும் போட்டியாளர்கள் மீது தனக்கு இருக்கும் வன்மம் மொத்தத்தையும் கொட்டி இருக்கிறார்.
ஜெஃப்ரீயை இந்த வீட்டில் தடவிக் கொண்டும் நோண்டிக் கொண்டும் இருப்பானே என்று சொல்லியிருந்தார். அதுபோல சத்யா சட்டை போடாமல் சுற்றிக்கொண்டு இருப்பவன் என்று சொல்லியிருந்தார். அருண், விஷால், தீபக் போன்றோரை ஜால்ராஸ் என்று திட்டி இருந்தார்.
இப்படி இவர் வந்த நேரத்தில் இருந்து தன்னுடைய கோபத்தை எல்லாம் மொத்தமாக போட்டியாளர்களிடம் காட்டி இருக்கிறார். இதனால் இவர் எப்போ வெளியே போவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதோடு இவர்களுக்குள் எப்போது வேண்டும் என்றாலும் பெரிய அளவில் சண்டை நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்படியான நிலையில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications