பிக் பாஸ் 8: வின்னர் இவங்கதான்! விஜய் சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ்.. திக்கு முக்காடிய போட்டியாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே ஜெயித்த ரயானுக்கு பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே சென்று விஜய் சேதுபதி டிக்கெட்டை கொடுத்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 90 நாட்களை கடந்து விட்டது. அடுத்த வாரத்தோடு நிகழ்ச்சி முடிவுடைய இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த வாரத்தில் டிக்கெட் டூ பினாலே நடைபெற்றது.

bigg boss tamil 8 bigg boss 8

இதில் வெற்றி பெறும் நபர் நேரடியாக பைனலுக்கு போகப்போகிறார். வரும் வாரத்தில் அவரை எலிமினேஷன் செய்ய முடியாது. இதனால் இந்த டாஸ்க்கில் எப்படியாவது ஜெயித்து டிக்கெட்டை பெற்று விட வேண்டும் என்று கடந்த வாரத்தில் போட்டியாளர்கள் எல்லோரும் போட்டி போட்டு விளையாடினார்கள். ஆனால் கடைசியில் ரயான் தான் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.

ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முடிவில் யார் வெற்றி பெற்றார் என்பதை அறிவிக்காமல் வார இறுதி நாட்களில் விஜய் சேதுபதி இதை அறிவிப்பார் என்று சொல்லிவிட்டார். இதனால் போட்டியாளர்கள் எல்லோரும் குழப்பத்தில் இருந்தனர். அதேபோல இந்த டிடிஎஃப் டாஸ்க்கில் சில விதி மீறல்கள் நடந்ததால் இந்த டாஸ்க் ரத்து செய்து பட்டுவிடும் என்ற செய்திகளும் பரவி வந்தது.

அதனால் இவ்வளவு கஷ்டப்பட்டு ரயான் விளையாடினாலும் அது கடைசியில் வேஸ்டா என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. நேற்றைய எபிசோடில் யார் வெற்றி பெற்றார்கள் என்று விஜய் சேதுபதி அறிவிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்று எபிசோடில் நாளை சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். நேற்று அதிரடியாக ராணவ் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சூழ்நிலையில் இந்த டாஸ்க்கில் யாரு வெற்றி பெற்றார் என்பதை சொல்லாமல் இதை சேதுபதி விட்டு விட்டு என்பது பலருடைய கேள்விகளாகவும் இருந்தது. ஆனாலும் இன்றைய எபிசோட்டுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் சேதுபதி வீட்டிற்குள்ளேயே சென்று யார் ஜெயித்தார் என்று அறிவித்திருக்கிறார்.

அதாவது ரயான் தான் ஜெயித்திருக்கிறார். அவருக்கு டிக்கெட்டை விஜய் சேதுபதி கொடுத்து இருக்கிறார். அப்போது ரயான் நான் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் 24வது ஆளாக.. அதாவது கடைசி ஆளாக உள்ளே வந்தேன் ஆனால் முதல் ஆளாக பைனலுக்கு போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ARM என்ற வார்த்தைகளில் உள்ளவர்கள் தான் ஒவ்வொரு சீசனிலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் கடந்த வருஷத்தில் A எழுத்தில் இருந்து அர்ச்சனா ஜெயித்ததால் இந்த வருஷத்தில் R எழுத்து இருக்கும் நபர் தான் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து இருக்கிறது.

அதனால் ராணவ் அல்லது ரயான் இருவருக்கும் R என்ற எழுத்தில் இருப்பதால் இவர்கள்தான் இந்த சீசன் வின்னரா? என்ற கேள்விகளும் எழுந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ராணவ் வெளியேற்றப்பட்டார். அப்போது கூட ரயானிடம் நீ டைட்டில் ஜெயித்து விட்டு வா. அந்த ARM நியாபகம் இருக்கா என்று கேட்டிருந்தார்.

இப்போது டிக்கெட் 2 பினோலேவில் முதல் ஆளாக ரயான் உள்ளே நுழைந்திருக்கும் நிலையில் யார் இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+