BB 8 finalist 5 பேரின் சம்பள விபரம்.. முத்துக்குமரனுக்கு தான் குறைவு! ஆனால் யாருக்கு அதிகம் தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் ஃபைனலிஸ்ட் ஆக தேர்வான முத்துக்குமரன், விஜே விஷால், ரயான், பவித்ரா மற்றும் சௌந்தர்யாவின் சம்பள விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் யார் அதிக சம்பளம் பெற்று இருக்கிறார்கள்? யாருக்கு குறைவான சம்பவங்கள் என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி 14 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்று கிராண்ட் பினாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் தற்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு வந்திருக்கின்றனர்.

பிக் பாஸ் 8 பைனலிஸ்ட் சம்பளம்: இந்த சீசனில் பைனல் லிஸ்ட் ஆக தேர்வான முத்துக்குமரன், சௌந்தர்யா, பவித்ரா, வி ஜே விஷால் மற்றும் ரயான் ஆகியோரின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
முத்துக்குமரன் சம்பளம்: இந்த சீசனில் டைட்டில் வின்னராக தேர்வு ஆன முத்துக்குமரனுக்கு ஒரு நாளைக்கு பத்து ஆயிரம் சம்பளம் வாங்கி இருக்கிறார். அவர் மொத்தம் இந்த பிக்பாஸ் வீட்டில் 15 நாட்கள் இருந்ததற்கு அவருக்கு 10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. அதோடு அவர் டைட்டில் வின்னர் ஆனதால் 40 லட்சத்து ஐம்பதாயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி டாஸ்க் அவர் வென்ற 50,000 கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது .
ராயன் சம்பளம்: விஜய் டிவியில் ரயான் ஏற்கனவே சில சீரியல்களில் நடித்திருக்கிறார் அதிலும் சமீபத்தில் முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்திருந்தார். அதுபோல தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பணிவிழும் மலர்வனம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருக்கு குறைவான சம்பளம் தான் கிடைத்திருக்கிறது. முத்துக்குமரனுக்கு அடுத்ததாக இவர்தான் குறைவான சம்பளம் வாங்கி இருக்கிறார். இந்த வீட்டில் 77 நாட்கள் இருந்திருக்கிறார். அதற்கு அவருக்கு ஒரு நாளைக்கு 12000 விதம் 9 லட்சத்து 24 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதோடு பணப்பெட்டி டாஸ்க் வென்ற இரண்டு லட்சமும் இணைக்கப்படும்.
சௌந்தர்யா சம்பளம்: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆவது நிகழ்ச்சியில் ரன்னராக இடம் பிடித்த சவுந்தர்யாவிற்கு ஒரு நாளைக்கு 12000 சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அவர் மொத்தம் இந்த வீட்டில் 105 நாட்கள் தங்கி இருந்தார். அதற்கு 12 லட்சத்தில் 60 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
விஜே விஷால் சம்பளம்: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னராக தேர்வான விஜே விஷால் ஏற்கனவே விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு நாளைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 15,000 சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவர் மொத்தம் 105 நாட்கள் தங்கி இருந்த நிலையில் 15 லட்சத்து 75 ஆயிரம் சம்பளம் வாங்கியிருக்கிறார். அதோடு அவர் பணப்பெட்டி டாஸ்க்கில் 5 லட்சம் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த பணமும் அவருக்கு சேர்த்து கொடுக்கப்படுகிறது.
பவித்ரா ஜனனி: விஜய் டிவியில் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்த பவித்ரா பிக் பாஸ் 8 பைனல் லிஸ்ட்களில் அதிக சம்பளம் வாங்கியிருக்கிறார். அவருக்கு ஒரு நாளைக்கு 20,000 சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பவித்ரா இருந்த 105 நாட்களுக்குள் சேர்ந்து 21 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதோடு 2 லட்சத்திற்கான பணப்பெட்டியையும் பவித்ரா வென்றிருக்கிறார்.












Click it and Unblock the Notifications