பிக் பாஸ் வீட்டில் அன்ஷிவிற்கு சம்பளம் இவ்வளவா? விஜய் டிவி பிரபலம் என்பதால் சிறப்பு சலுகையா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கடந்த வாரத்தில் எலிமினேட்டான சீரியல் நடிகை அன்ஷிதாவிற்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் இருந்த நிலையில் மொத்தமாக இவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் போட்டியாளர்கள் தங்குவதற்கு அவர்களுக்கு அதிகப்படியான சம்பளமும், சாப்பாடு, இருக்க இடம் என எல்லாமே வசதிகளும் கிடைக்கிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் போட்டி போடுகிறார்கள். இந்த சீசனில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒரு சிலர் மட்டும்தான் வேற துறையில் இருந்து வந்திருக்கிறார்கள்.

அதுபோல பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஆறு போட்டியாளர்கள் வைல்ட் கார்டில் என்ட்ரி ஆனார்கள். மொத்தம் 24 போட்டியாளர்களில் கடந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் அவர்களையும் சேர்த்து மொத்தம் 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
பிக் பாஸ் விட்டு வெளியேறும் முன்பு காதில் அன்ஷிதா சொன்ன வார்த்தை! கெஞ்சிய விஷால்! விஜய் சேதுபதி ரியாக்ஷன்
இன்னும் பத்து போட்டியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் நிலைத்திருக்கின்றனர். அதிலும் இந்த வாரத்தில் இருந்து டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் எப்படியாவது இந்த வாரத்தில் வரும் மணி டாஸ்க்கில் கலந்துகொண்டு பணப்பெட்டியை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த அன்ஷிதா நேற்று அவரே எதிர்பார்க்காத வகையில் வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரத்தில் யார் வெளியேற போகிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று விஜய் சேதுபதி கேட்ட கேள்விக்கு கூட அன்ஷிதா ராணவ் பெயரைதான் சொல்லி இருந்தார். தான் இந்த நிகழ்ச்சியில் எப்படியும் நிலைத்து இருப்போம் என்று நம்பிய அன்ஷிதாவிற்கு கடைசியில் ஏமாற்றம் கிடைத்தது.
அதேபோல அன்ஷிதா பிக்பாஸ் வீட்டிற்குள் 84 நாட்கள் இருந்திருக்கிறார். அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது அன்ஷிதாவிற்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதாம். அதன்படி அவர் இருந்த 87 நாட்களுக்கு 21 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் டிவியில் செல்லமா சீரியல் மூலமாக அன்ஷிதாவிற்கு பிரபலம் கிடைத்தது. அதிலிருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இதனால் இவர் விஜய் டிவி ரசிகர்களுக்கு பரீட்சையமாகி இருக்கிறார்.

அதுபோல இப்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இருந்து விட்டு வந்திருக்கிறார். இவருடைய மலையாளம் கலந்த தமிழ் பேச்சு பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சிலரோடு சண்டை போடும் ஆடியோக்களுக்கு அதிகமானோர் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications