பிக் பாஸ் 8இல் எடுக்கப்பட்ட புது முயற்சி.. விஜய் சேதுபதி கலக்கல்.. இன்று மாலை ஹைலைட் இருக்கு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமாகி இருக்கிறார். அதைத்தொடர்ந்து இன்று மாலை யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாக இருக்கிறது. அது இதுவரைக்கும் பிக் பாஸ் வரலாற்றில் நடக்காத நிகழ்வாக இருக்கப்போகிறது என்று விஜய் டிவி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு டிஆர்பி அதிகரிக்க வைப்பதற்காக பல முயற்சிகள் சேனல் தரப்பில் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனிலும் டிஆர்பியில் கவனம் செலுத்த வேண்டும் என்று சேனல் தரப்பில் இருந்து பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தாலும் முதல் இரண்டு சீசன்களுக்கு இருந்த டிஆர்பி கடைசி இரண்டு சீசன்களுக்கு வரவில்லை. அதே நேரத்தில் ஏழு சீசன்களாக நடுவராக இருந்த கமல்ஹாசன் வரும் எட்டாவது சீசனில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியில் என்ன புதுமை கொண்டுவரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இதனாலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்று சின்னத்திரை ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விஜய் சேதுபதி தொகுப்பாளராக கமிட் ஆனதும் இந்த சீசனில் போட்டியாளர்கள் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்ற உத்தேச பட்டியலும் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே நடக்காத ஒரு வித்தியாசமான முயற்சியை குழுவினர் எடுத்திருக்கின்றனர். அதாவது இந்த சீசன்களுக்கான முதல் ப்ரோமோ ஏற்கனவே கடந்த வாரத்தில் வெளியானதை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அடுத்த ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதுவும் மக்களால் அந்த ப்ரோமோ வெளியிடப்படும் என்று சேனல் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

சென்னை பெசன்ட் நகரில் செப்டம்பர் 11 மாலை 5 மணிக்கு ரசிகர்கள் இந்த பிரமோவை வெளியிடுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இது சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சியில் பிரீஸ் ஹோட்டல், மதுரையில்- அம்பிகா காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், சேலம்- சக்தி கைலாஷ் உமன்ஸ் காலேஜ், திருநெல்வேலியில் - பெல் ஸ்கூல், விருதுநகரில்- அப்சரா சினிமாஸ், வேலூர்- ஓல்ட் பஸ் ஸ்டாண்ட், கடலூர்- போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப்,
கோயம்புத்தூர்- ஈரோடு வெள்ளையர் காலேஜ் ஃபார் வுமன்ஸ் போன்ற பல இடங்களிலும் வைத்து மாலை ஐந்து மணிக்கு பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல இன்று வர இருக்கும் ப்ரோமோவில் மக்களிடம் இருந்து வரும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கும் வகையில் புது முயற்சி எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது அந்த ப்ரோமோவில் மக்களின் குரலாய் மக்கள் செல்வன் என்பதே முக்கிய விஷயமாக இருக்குமாம். ப்ரோமோவில் தினமும் காலையில் பால் வியாபாரம் செய்பவர்களிடம் இருந்து தொடங்கி நாம் அன்றாடம் சந்திக்கும் பலதரப்பட்ட மக்களையும் விஜய் சேதுபதி சந்திக்கிறாராம்.
பால் வியாபாரம் செய்பவரிடம் தீர்ப்பு சொல்ல வேண்டி வந்தால் அது கரந்த பாலில் சுத்தமா இருக்கணும் என்று தெரிந்து கொள்வது போலவும், அதற்குப் பிறகு போக்குவரத்தில் சந்திக்கும் பிரச்சனைகள், பிளே கிரவுண்டில் சந்திக்கும் பிரச்சனை என்று அடுத்தடுத்து பல பிரச்சனைகள் சந்திக்கும் நிலையில் பிளேகிரவுண்டில் சந்திக்கும் நபருடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு கார்டு காட்டப்படுகிறது. ஏற்கனவே போன சீசனில் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதை வைத்து இந்த கார்டு இப்போது முதல் ப்ரோமோவில் காட்டப்படுகிறது.
இதனால் தீர்ப்பு என்பது கரந்த பாலை போல சுத்தமாகவும் அதே நேரத்தில் பிரச்சனை என்றால் உடனடியாக ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி விடுவோம் என்றும் இன்று வெளியாகும் ப்ரோமோவில் காட்சிகள் இருக்கு என்று கூறப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications