பிக் பாஸ் 8: ஷூட்டிங் முடிந்தது.. இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா? தப்பித்த சாச்சிகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஏழாவது போட்டியாளராக யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் 5 போட்டியாளர்கள் டேஞ்சர் சோனில் இருந்த நிலையில் கடைசியில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
மிகவும் எதிர்பார்ப்போடு பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி பிரமாண்டமாக கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கும் போதே 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்கள். அதில் அதிகமானோர் விஜய் டிவி பிரபலமாக இருந்தனர். அதைத்தொடர்ந்து சில வாரங்களில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். இதனால் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது.

அதுபோல இதுவரைக்கும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த சீசனில் விஜய் சேதுபதி உடைய தொகுப்பாளர் திறமை எப்படி இருக்கிறது என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். விஜய் சேதுபதி யாரையும் ஃபாலோ பண்ணாமல் தனி ஸ்டைலில் நிகழ்ச்சியை கொண்டு போய் கொண்டு இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் ஆறு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். முதலாவதாக ரவீந்தர். அவரைத் தொடர்ந்து அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, சிவகுமார் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டேஞ்சர் சோனில் சாச்சனா, தர்ஷிகா, ஆனந்தி, சத்யா, ரஞ்சித் என 5 பேரும் டேஞ்சரில் இருந்தனர்.
ஆனால் தற்போது வெளியான தகவலின்படி ஆர் ஜே ஆனந்தி வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாளை எபிசோடுக்கான சூட்டிங் தற்போது முடிவடைந்து இருக்கும் நிலையில் ஆனந்தி தான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சாச்சனா வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதி அவரை காப்பாற்றி அடுத்த போட்டியாளர்களை பழி கொடுத்து விடுகிறார் என்று பலர் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
ஆரம்பத்தில் ஆர் ஜே ஆனந்தி பலமான போட்டியாளராக இருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் பல இடங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை காட்ட தவறிவிட்டார். ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்ற விமர்சனங்கள் அவர் மீது வந்தது. அதன் காரணமாகவே இந்த வாரம் அவருக்கும் வாக்குகள் குறைவாகத்தான் இருந்தது.
அதுபோல ரஞ்சித் அடுத்த வாரத்திற்கான தலைவராக தேர்வாகி இருக்கிறார். இந்த வாரத்தில் ஜெஃப்ரி தலைவராக இருந்த நிலையில் சில நேரங்களில் அவர் ஒரு தலைவராக நடந்து கொண்டாலும் பல நேரங்களில் அவருடைய கட்டளையை மற்ற போட்டியாளர்கள் சரியாக செய்யவில்லை. இது குறித்து இந்த வாரம் விசாரணை நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications