பிரபு வீட்டில் நடிகையால் வெடித்த துப்பாக்கி.. சிறுவன் சிவக்குமாரை விரட்டிய அன்னை இல்லம்: பிரபலம் நச்
சென்னை: பிக்பாஸ் பிரபலம் சிவக்குமார் குறித்தும், சிவாஜி குடும்பத்தினரின் புறக்கணிப்பு குறித்தும் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பல்வேறு விஷயங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், "சிவாஜி தன்னுடைய சொத்துக்கள் வெளியில் சென்றுவிடக்கூடாது என்பதற்காக ராம்குமாருக்கு, தன்னுடைய சொந்த தங்கையின் மகளை திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாட்சியை ரகசியமாக ராம்குமார் 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சிவாஜி சிவக்குமார் என்ற மகனும் உண்டு.

போயஸ் பங்களா: இதே கதை பிரபுவுக்கும் உண்டு.. முதல் மனைவி இருக்கும்போதே, குஷ்புவை திருமணம் செய்ய முடிவு செய்து, போயஸ் கார்டனில் பங்களா வாங்கிட்டாரு. அந்த பங்களாவில் குஷ்புவுடன் குடியேற போவதாக தகவல் கிடைத்ததுமே, சிவாஜி வீட்டில் துப்பாக்கி வெடிக்கிறது. துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, தவறுதலாக வெடித்துவிட்டதாக வழக்கு அப்போது பதிவு செய்யப்பட்டது.
எப்போதுமே பெரிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வீட்டில் துப்பாக்கி வெடித்தால், அது தானாகவே வெடித்ததாக சொல்வார்கள். இதுவே ஏழைகள் வீட்டில் வெடித்தால், உடனே அவனை சிறையிலடைப்பார்கள். அந்தவகையில், குஷ்புவை ஏற்றுக் கொள்ள சிவாஜி குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. பிரபு - குஷ்புவின் உறவு சிவாஜியால் முறிக்கப்படுகிறது. பிரபு, குஷ்பு காதலை முறித்த சிவாஜியால், ராம்குமார் என்ற ராங்குமாரின் கள்ளக்காதலை முறிக்க முடியவில்லை..
7 வயது சிறுவன்: சிவாஜி மரணமடைந்தபோது, சிவக்குமாருக்கு 7 வயது.. சிவாஜி உயிரிழந்ததால், நேரில் பார்க்க செல்கிறான் அந்த ஆனால், இந்த பையனை யார் இங்கே கூட்டிட்டு வந்தது என்று சிவாஜி குடும்பத்தினர் கேட்கிறார்கள்.. பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு, நாளைக்கு உரிமை கொண்டாடி விடுவானே? என்று 7 வயது சிறுவனை விரட்டியடித்த குடும்பம்தான் அந்த சிவாஜி குடும்பம். சிவாஜி குடும்பத்தில் எந்த தவறு நடந்தாலும், அது குற்றமாக பார்க்கப்படாது.
இன்று அந்த சிவக்குமார் பிக்பாஸில் மிகப்பிரபலமாகி விட்டார். இவரது திருமணத்துக்கு பெற்ற தகப்பன்கூட வரவில்லை. இந்த குடும்பத்தில் மறைத்து, ஒளித்து, ரகசியமாக வைக்ககப்பட்டவர் சிவக்குமார்.
சிவாஜி பேரன்: கடைசியில், சிவாஜியின் பேரன் என்று சொல்வதில் வெட்கப்படுகிறேன் என்று சொல்கிறார். ஏனென்றால், சினிமா வாய்ப்பு கேட்க செல்லும்போது, "சிவாஜி பேரன் என்று தெரிந்து மிகப்பெரிய மரியாதையை தருகிறார்கள். அது என்னுடைய மரியாதையை தாண்டிய, மரியாதையாக இருக்கு. அதனால் சிவாஜி பேரன் என்று சொல்லக்கூடிய பெருமைப்பட்ட காலம்போய், இப்போது வெட்கப்படும் அளவுக்கு இந்த குடும்பம் என்னை தள்ளிவிட்டது" என்கிறார்.
சிவகுமார் ஸ்ரீபிரியாவால் ரகசியமாக வளர்க்கப்படுகிறார்.. ரகசியமாக பாதுகாக்கப்படுகிறார்.. ஸ்ரீபிரியாதான் அவரை உற்சாகப்படுத்துகிறார்.. உன்னுடைய தாத்தாவை போல நீ சாதித்து காட்டு என்று ஊக்கம் தருகிறார் ஸ்ரீபிரியா..
டான்சர் பெண்: இப்படி அந்த இளைஞர் மேலும் மேலும் முன்னேறி வரும்போது, சிவாஜி குடும்ப திரும்பிகூட பார்க்கவில்லை. சுஜா என்ற குரூப் டான்சர் பெண், சிவக்குமாரை விரும்பி திருமணம் செய்கிறார். இந்த திருமணத்துக்கு கூட பெற்ற அப்பா வரவில்லை. முகவரியை தொலைத்து சிவக்குமார் நிற்கும்போது, அன்னை இல்லம் அந்த இளைஞனை கண்டுகொள்வதில்லை என்பதே புகாராக வெடித்துள்ளது" என்றெல்லாம் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications