வைல்ட் கார்ட் போட்டியாளர்களால் பிக் பாஸ் வீட்டுக்குள் வெடித்த பூகம்பம்.. பத்த வச்சுட்டாங்களே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்று 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி ஆகி இருக்கின்றனர். அவர்கள் வந்த பிறகு உள்ளிருக்கும் போட்டியாளர்களின் விளையாட்டு வேறு விதமாக மாறி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி 16 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. ஆனால் இதில் இருந்து மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று 6 போட்டியாளர்கள் உள்ளே வந்திருக்கின்றனர்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் உள்ளே புது போட்டியாளர்கள் வந்து பிறகு ஏற்கனவே இருந்த போட்டியாளர்களிடம் ஒரு பயம் ஏற்பட்டிருக்கிறது. அதோடு உள்ளே வந்தவர்கள் வெளியே நடக்கும் பல விஷயங்கள் பற்றி சொல்லி இருக்கிறார்கள். இதனால் இன்று நடந்த ஓபன் நாமினேஷனில் பலர் தங்களுடைய கோபத்தை காட்டி இருக்கிறார்கள்.

ஓபன் நாமினேஷனில் முகத்துக்கு நேராகவே சிலர் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஒரு சிலர் புலம்பி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில் நேற்று வரைக்கும் அமைதியாக இருந்த சௌந்தர்யா மற்றும் சத்தியா இன்று மூன்றாவது ப்ரோமோவில் சண்டை போட்டு இருந்தது பார்ப்பவர்களை அதிசயப்பட வைத்திருந்தது.

அதற்கு காரணம் வெளியே இருந்து வந்த வைல்டு கார்டு எண்ட்ரிகள் தான். அவர்கள் தான் வெளியே என்ன நடக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். அதிலும் சௌந்தர்யாவிற்கு வெளியே அதிகமான வரவேற்பு இருக்கிறது என்று ரயான் உட்பட சிலர் உள்ளே சொல்ல அதை வைத்து தான் இன்று பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்.

அதோடு இதுவரைக்கும் சௌந்தர்யா மீது பல குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டிருந்த விஜே விஷாலிடம் ரயான் வெளியே நடக்கும் நிகழ்வுகள் பற்றி சொன்னதும் விஜே விஷால் முகம் இன்று மாறிப் போய் இருக்கிறது.

அதோடு உள்ளிருக்கும் பெண் போட்டியாளர்கள் எல்லா ஆண்களையும் மனதை மாற்றுகிறார்கள் முத்துக்குமார் மற்றும் தீபக் மட்டும் தான் அதிகமாக மனம் குழப்பம் அடையாமல் இருக்கிறார்கள் என்று ரயான் சொன்னதை கேட்டு ஆண் போட்டியாளர்களுக்குள் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இனி விளையாட்டு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+