பிக் பாஸ் 8: அன்ஷிதா, அர்னாவ் இங்கே ஏமாத்துறீங்க! சௌந்தர்யா கேட்ட கேள்வி.. வந்தாச்சு சிக்கல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. அப்போது அர்னாவ் அன்ஷிதாவே நாமினேஷன் செய்திருந்தார். ஆனால் அர்னாவ்வை சௌந்தர்யா நஞ்சுண்டன் நாமினேஷன் செய்து அர்னாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சீரியல் நடிகர் அர்னாவ் நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திவ்யா கர்ப்பமாக இருந்தபோது அர்னாவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். அப்போது அந்த சீரியலில் அவரோடு நடித்த நடிகை அன்ஷிதாவோடு தொடர்பு ஏற்பட்டதாகவும் அதனால் எங்களுக்குள் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டது அப்போது அர்னாவ் என்னை அடித்துவிட்டார் என்று திவ்யா ஸ்ரீதர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தார்.

அதற்கு பிறகு திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னாவ் பேசிய வீடியோக்களும் இணையத்தில் வெளியானது. அதுபோல அர்னாவ் ஏற்கனவே பல பெண்களோடும், திருநங்கைகளுடனும் தொடர்பிலிருந்து அவர்களை திருமணம் செய்கிறேன் என்று ஏமாற்றியதாகவும் பல ஆடியோக்களை திவ்யா ஸ்ரீதர் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதனால் இவர்களுடைய பிரச்சனை ரசிகர்கள் பலருக்கும் தெரிந்ததுதான்.
அதுபோல அன்ஷிதா அர்னாவை தான் காதலிப்பதாகவும், இப்ப உன்னை நேரில் பார்த்தால் அடிச்சு கொன்னு புதைத்து விடுவேன் என்று பேசிய ஆடியோவையும் திவ்யா ஸ்ரீதர் வெளியிட்டு இருந்தார். திவ்யாவை அடித்து கொடுமைப்படுத்தினார் என்று அவர் கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக அர்னாவ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
பிறகு சில மாதங்கள் கழித்துதான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். அதைத்தொடர்ந்து செல்லம்மா சீரியலில் கதாநாயகனாகவே அர்னாவ் நடித்து வந்தார். இப்போது அந்த சீரியலும் முடிவுக்கு வந்திருந்த நிலையில் அர்னாவ் மற்றும் அன்ஷிதா இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. அப்போது அர்னார் அன்ஷிதாவை நாமினேஷன் செய்திருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், அன்ஷிதாவை எனக்கு தெரியும். அவர் எல்லோரிடமும் சீக்கிரமாக மிங்கிலாகி விடுவார். ஆனால் இந்த வீட்டில் அவர் இன்னும் யாரிடமும் செட்டாகாமல் இருக்கிறார். அதற்காக அவரை நான் நாமினேஷன் செய்கிறேன் என்று சொல்லி இருந்தார்.
இதைத்தொடர்ந்து நாமினேஷன் செய்ய வந்த ஐஸ்வர்யா நஞ்சுண்டன் எனக்கு அர்னாவ் மற்றும் அன்ஷிதாவை ஏற்கனவே தெரியும் அவர்கள் இருவரும் எவ்வளவு க்ளோஸ் என்று எனக்கு தெரியும். ஆனால் இப்போது அன்ஷிதாவை நாமினேஷன் செய்திருப்பது நம்பும்படியாக இல்லை. இவர்களுக்குள் ஒரு பிளான் இருக்கிறது. அதனால் நான் அர்னாவை நாமினேஷன் செய்கிறேன் என்று போட்டு உடைத்து இருக்கிறார்.

சௌந்தர்யா இப்படி பேசும்போது அர்னாவ் மற்றும் அன்ஷிதா இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். ஆரம்பத்திலேயே இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றிக் கொண்டிருந்தால் மக்கள் நம்மை விமர்சிக்க தொடங்கி விடுவார்கள் என்று இவர்கள் புது பிளான் போட அதை அங்கிருக்கும் சௌந்தர்யா கச்சிதமாக கண்டுபிடித்து அம்பலப்படுத்தி இருக்கிறார். நாம போட்ட பிளான் எல்லாம் வேஸ்ட்டா போச்சே என்று சொல்லும் வகையில் தான் அர்னாவ் முழித்துக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications