நேற்று விஜய் சேதுபதியிடம் பிஆர் பற்றி சுனிதா கேட்ட கேள்வி! சௌந்தர்யா ரியாக்ஷன்! விஜய் சேதுபதி பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் நேற்று விஜய் சேதுபதியிடம் சுனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிலர் செய்யும் பி ஆர் வேலைகள் பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது. அதிலும் இந்த நிகழ்ச்சி 14வது வாரம் வந்திருக்கும் நிலையில் நேற்று எதிர்பார்க்காத வகையில் அருண் எலிமினேட் செய்யப்பட்டார். அது உள்ளிருக்கும் போட்டியாளர்களை மட்டுமல்ல பிக் பாஸ் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

வாக்குகளின் அடிப்படையில் பவித்ரா தான் கடைசி இடத்தில் இருக்கிறார் என்று நேற்று முன்தினம் வரைக்கும் தகவல்கள் வெளியான நிலையில் கடைசியில் நேற்று அருண் வெளியேற்றப்பட்டார். ஆனால் அருண் வெளியே செல்லும்போது கூட பாசிட்டிவாக பேசி வெளியேறி இருந்தார். அதுபோல அருணை பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதியும் பாராட்டி இருந்தார்கள்.
இப்படியான நிலையில் அதற்கு முன்பு விஜய் சேதுபதி இடம் சுனிதா கேட்ட கேள்வியும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது இந்த நிகழ்ச்சிக்கு எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் எதற்காக கூப்பிட்ட பட்டார்கள் என்று நீங்க நினைக்கிறீங்க என்று ரீ என்ட்ரி கொடுத்த 8 போட்டியாளர்களிடமும் விஜய் சேதுபதி கேள்வி கேட்டிருந்தார்.
அப்போது சுனிதா சிலர் எந்த உழைப்பும் போடாமல் பி ஆர் சப்போர்ட்டோடு இருக்கிறார்கள். அவர்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக அவர்கள் என்ன வேணாலும் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மத்தவர்களை தரம் தாழ்ந்து பேசுகிறார்கள், மற்றவர்களுடைய திறமையை அமுக்குகிறார்கள். அதுதான் வேதனையாக இருக்கிறது என்று சொல்கிறார்.
அதற்கு விஜய் சேதுபதி நீங்கள் எதனால் வெளியே போனீர்கள் என்று நினைக்கிறீங்க என்று கேட்க, மக்கள் ஓட்டு போட்டு என்று சொல்கிறார். அப்போ மக்கள் ஓட்டு போட்டு என்றால் வெளியே என்னதான் பி ஆர் வேலை நடந்தாலும் மக்கள் அதை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.
உள்ளே சரக்கு இல்லை என்றால் மக்கள் அதை சப்போர்ட் பண்ண மாட்டார்கள். நீங்கள் செய்யும் ஏதாவது செயல் மக்களுக்கு பிடித்தால் மக்கள் அதை விரும்புவார்கள் என்று சொல்ல, இல்லை சார் நான் என்ன சொல்ல வர்றேன்னா வெளியே போன பிறகு பலர் அன்ஃபேர் எவிக்ஷன் என்று சொல்லுகிறார்கள், ஆனால் நாங்கள் அப்போ எப்படி வெளியே போனோம் என்பதுதான் எங்களுக்கு வருத்தம் என்று சுனிதா கேட்கிறார்.
அதற்கு விஜய் சேதுபதி என்னதான் வெளியே பிஆர் பண்ணுனாலும் உள்ளே இருக்குறதுக்கு பெர்பார்ம் பண்ணனும், இல்ல வெளியே எதுவும் நடக்காது என்று சொன்னதும், சௌந்தர்யா கைதட்ட அவருக்கு மட்டும் கேமரா போக்கஸ் வைக்கப்படுகிறது.
அப்போது தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி நம்ம ஒரு படத்துக்கு என்னதான் ப்ரமோஷன் பண்ணினாலும் படத்தை பார்க்கும்போது அங்க ஒன்னு இல்ல என்றால் மக்களுக்கு தெரிஞ்சிடும் இல்ல. அது அந்த படம் நல்லா இருக்கா? இல்லையா? என ஒரே நாளில் மக்கள் சொல்லிருவாங்க.
ஒரு முறை இரண்டு முறை வேணும்னா பி ஆர் செட் பண்ணி ஓட்டு போடலாம் அதுக்கப்புறம் சர்வே ஆகணும்னா நிச்சயமாகவே உங்ககிட்ட என்ன இருக்கு நீங்க எப்படி பெர்பார்மன்ஸ் பண்ணுவீங்க என்று பேஸ் பண்ணி தான் இருக்கு. நான் எந்த ஷோ உடைய உண்மை தன்மையை நம்புறேன்.
அதற்கு காரணம் சுனிதா வெளியே போகும்போது சுனிதா போயிட்டாங்கன்னு இங்க பல பேர் ஃபீல் பண்ணனும் மக்கள் ஓட்டு தான் இறுதி ஆனது என்று முடிவெடுக்கப்பட்டது நான் நம்புறேன் என்று விஜய் சேதுபதி சொன்னதும், அதற்கு சுனிதா நான் இந்த நிகழ்ச்சிக்குள் வரும் போது இங்கு பி ஆர் ஓட்டு வச்சு சிலர் முன்னாடி நிக்குறாங்க என்று சொல்றதுக்காகத்தான் சார் வந்தேன் என்று சொல்கிறார்.












Click it and Unblock the Notifications