பிக் பாஸ் 8: அட இந்த நடிகருமா வாராரு? சும்மாவே அவ்ளோ பேசுவாரு.. கண்டெண்டுக்கு பஞ்சம் இருக்காதே
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் டிவி தொகுப்பாளரும் நடிகருமான பிரபலம் ஒருவர் கலந்து கொள்ள போவதாக லேட்டஸ்ட் செய்தி வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். முதல் சீசனில் கிடைத்த வெற்றியின் காரணமாகவே ஏழு சீசனில் வெற்றிகரமாக முடிவடைந்தது. ஆனாலும் எட்டாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே பல பிரச்சனைகளும் தொடங்கிவிட்டது. இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் திடீரென்று விலகி இருந்தார்.

ஆரம்பத்தில் இருந்து கமல்ஹாசனுக்கு அதிகமான வரவேற்பு இருந்தாலும் கடந்த சீசனில் அவருக்கு நெகட்டிவ் இமேஜ் தொடங்கியிருந்தது. அதன் காரணமாக அவர் விலகி விட்டாரா? என்று கேள்விகளும் இருக்கிறது. அதே நேரத்தில் கமல்ஹாசன் தான் விலகியதற்கு காரணம் அதிகமான படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.
இப்படியான நிலையில் இந்த சீசனில் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதியை வைத்து ப்ரோமோ சூட் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

இன்னும் ஒரு சில வாரங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிடும் நிலையில் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் பிரபலம் அடைந்த அருண் கலந்து கொள்ளப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது.

அவரை தொடர்ந்து தயாரிப்பாளரும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்தர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோது தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி தான் அவர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி இருந்தார்.

அதனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? 100 நாட்கள் வெளிஉலக தொடர்பு இல்லாமல் அவரால் அந்த வீட்டிற்குள் இருக்க முடியுமா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர் கலந்து கொள்வதற்கு அதிகமான வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் டிடிஎப் வாசன் மற்றும் ஜோயா கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்திகள் எல்லாம் ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்ததுதான் ஆனால் இப்போது புதியதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது விஜய் டிவியில் முடிவுக்கு தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கதாநாயகன் தீபக் இந்த சீசனில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே தீபக் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அதோடு பல சீரியல்களிலும் தீபக் நடித்திருக்கிறார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அதிகமான கண்டென்ட் கிடைக்கும் என்று இவரை கிளிக் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களோடு வேறு எந்த போட்டியாளர் வந்தால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்க கமெண்ட்டை தட்டி விடுங்க பாஸ்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications