பிக் பாஸ் 8: உனக்கு வெளியே அவங்க ஒர்க் பண்றாங்க! அது மட்டுமா? சௌந்தர்யா மீது சுனிதா குற்றச்சாட்டு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சௌந்தர்யா மற்றும் சுனிதா இருவருக்கும் இடையே சண்டை வெடிக்கிறது. இன்னைக்கு இதனால் சுனிதா அழுது கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கி 95 நாட்களை கடந்துவிட்டது. இந்த வாரத்தோடு இந்த நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் பினாலே நடைபெற இருக்கிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும் அதை தொடர்ந்து 6 வைல்டு கார்டு போட்டியாளர்களும் அறிமுகமானார்கள்.

ஆனால் இதில் இப்போது 6 போட்டியாளர்கள் மட்டும்தான் இறுதி கட்டத்தில் இருக்கிறார்கள். மீதமுள்ளோர் எவிக்ஷன் ஆகி இருக்கிறார். ஆனாலும் கடந்தவாரத்தில் ஏற்கனவே எவிக்ஷனான எட்டு போட்டியாளர்கள் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். இன்று சில போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று கனவோடு வந்த சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தங்களுடைய கோபங்களை சமூக வலைத்தளங்களில் கொட்டி இருந்தார்கள். சிலர் பேட்டிகளில் கூட ஒன்றுமே செய்யாதவர்கள் உள்ளே இருக்கிறார்கள் நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காக அவ்வளவு கஷ்டப்பட்டோம் ஆனால் நாங்கள் வெளியேற்றப்பட்டு விட்டோம், உள்ளிருப்பவர்களில் சிலர் பி ஆர் வைத்திருக்கிறார்கள் என்று கூறி வந்தனர்.
ஆனாலும் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சுனிதா மற்றும் சௌந்தர்யா இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது சுனிதா, இதெல்லாம் என்கிட்ட வச்சிக்காத.. நல்லா பண்ணுறீங்க.. எதுவுமே பண்ணாமல் இவ்வளவு தூரம் வந்துட்டீங்க. உங்க ஆர்கானிக் எனக்கு தெரியும். பிக் பாஸ் ஷோ உங்களுக்கு புரியலை என்று சௌந்தர்யாவை பார்த்து பேசுகிறார்.
அதற்கு சௌந்தர்யா நீங்க சொல்றது புரியல.. எதுவுமே பண்ணாம இவ்வளவு தூரம் வரமுடியாது. நான் மக்களை எண்டர்டெயின்மென்ட் பண்ணிருக்கிறேன். அதனால் தான் மக்கள் என்னை இங்க உட்கார வச்சுரக்காங்க என்று பதில் கொடுக்க,
அதற்கு சுனிதா உங்களுக்கு ஓட் பண்ண தெரிஞ்சவங்க, சம்பந்தப்பட்டவங்க இருக்காங்க. எனக்கு யாரு வோட் பண்ணுவா என்று கோபமாக கேட்கிறாார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே சௌந்தர்யா மற்றும் சுனிதா இருவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் சண்டை வந்து கொண்டே இருந்தது. எலிமினேஷன் ஆகி வெளியே போன பிறகு மீண்டும் ரீப்ளேஸ்மெண்டுக்காக உள்ளே வந்த பிறகு சுனிதா சௌந்தர்யா மீது வன்மத்தை காட்டுகிறார் என்று ரசிகர்கள் பலர் கமாண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications