பிக் பாஸ் 8: முடிந்தது ஷூட்டிங்..நாளை வெளியேற்றம் இவரா? இனி வைல்ட் கார்ட் என்ட்ரி தான் காப்பாற்றனும்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் மூன்றாவது வாரத்தில் யார் எலிமினேஷன் செய்யப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முதல் இரண்டு வாரம் ஆண் போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இந்த வாரம் பெண் போட்டியாளர் ஒருவர் தான் வெளியேறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரம் முழுக்க சண்டை, சச்சரவுகளோடு இருந்த இந்த நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தில் இருந்து சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.

18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்கள்தான். இதனால் ரசிகர்களுக்கு ஏற்கனவே இவர்கள் பரீட்சயமானவர்களாக இருந்தனர். இதனால் ஒரு விதத்தில் பிளஸ் ஆக இருந்தாலும் இன்னொரு விதத்தில் இவர்களைப் பற்றிதான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே என்று சொல்வது போலத்தான் இவர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர்.
சீரியலில் இவர்கள் நடித்துக் கொண்டிருந்தது போலவே இப்போது நிகழ்ச்சியிலும் நடிக்கிறார்கள் என்பது பலரும் முணுமுணுக்கும் வார்த்தையாக இருக்கிறது. முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இந்த வாரத்தில் அதிகமான பெண் போட்டியாளர்கள் தான் நாமினேஷனில் சிக்கி இருக்கிறார்கள்.
ஏற்கனவே 9 ஆண் போட்டியாளர்களில் இரண்டு பேர் வெளியேறி விட்டதால் ஏழு பேர் தான் இருக்கிறார்கள். இந்த வாரமும் இரண்டு ஆண் போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள். அதுபோல நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட்டை பெண்கள் இந்த வாரமும் பெற்று விட்டார்கள்.

கடந்த வாரத்திலும் இவர்கள்தான் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெண் போட்டியாளர்களில் யார் காப்பாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு நேற்று இருந்தது. கடைசியில் எல்லோரும் சேர்ந்து பவித்ராவிற்கு அந்த டிக்கெட்டை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் வாக்குகளின் அடிப்படையில் பவித்ரா தான் கடைசி இடத்தில் இருந்தார்.
இப்போது நாமினேஷன் ஃப்ரீ டிக்கெட் மூலமாக பவித்ரா சேவ் ஆகிவிட்டார். அதை தொடர்ந்து குறைந்த வாக்குகளில் தர்ஷா குப்தா, அன்ஷிதா இருவரும் இருக்கின்றனர். இவர்கள் இருவரில் யார் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்று காலை வெளியான தகவலின் படி இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று கூறப்பட்டது.
இது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பிறகு நாளைக்கு ஆன எபிசோடின் சூட்டிங் முடிந்த பிறகு தர்ஷா குத்தா தான் இந்த வாரம் வெளியேறி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. தர்ஷா குப்தா பிக் பாஸ் வீட்டிற்குள் ஏதாவது செய்து ப்ரோமோவில் இடம் பிடித்து விட வேண்டும் என்று வீட்டிற்குள் சில நேரங்களில் நல்ல செயல்கள் செய்தாலும் சில நேரங்களில் பார்க்கும் ரசிகர்களை கடுப்பு ஆக்கும் வகையில் ஏதாவது செய்து கொண்டே தான் இருக்கிறார்.

ஆனால் அவர் இந்த வாரம் வெளியேறுவது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுக்கும். ஒன்னுமே செய்யாமல் உள்ளே ஒரு சில போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை கம்பேர் பண்ணும் போது தர்ஷா குத்தா ஏதாவது செய்து கொண்டுதான் இருக்கிறார். அவரையும் வெளியேற்றி விட்டால் இந்த நிகழ்ச்சி இனி என்ன நிலைமை ஆகும் என்பது பலருடைய கேள்வி. ஒரு வழியாக இந்த வாரத்தில் புது வைல்ட் கார்ட் என்ட்ரி உள்ளே இறக்கினால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications