பிக் பாஸ்: நாங்க பேசி வச்சு தான் அப்படி விளையாடுனோம்.. ராணவ் சொன்ன வார்த்தை! அதிர்ச்சியில் சேதுபதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் டிசம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடில் டெவில் டாஸ்க்கில் பேசி வைத்து தான் விளையாடினோம் என்று ராணவ் சொன்ன வார்த்தையை கேட்டு விஜய் சேதுபதி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களை கடந்து விட்டது. அது போல இன்னும் ஒரு சில நாட்களிலேயே இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் சில பரபரப்பான சம்பவங்களும் நடைபெற்றது.

ஆரம்பத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிகழ்ச்சியில் பிறகு சில வாரங்கள் பெருசாக சுவாரசியம் இல்லாமல் கடந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சு இணையத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி இந்த வீட்டிற்குள் யார் இதுவரைக்கும் அட்டென்ஷன் கிடைக்க வேண்டும் என்று எல்லா இடத்திலும் நடந்து கொள்கிறார்கள் என்று கேள்வி கேட்டிருந்தார்.
அப்போது பலரும் அடுத்தவர்கள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் ராணவ் முத்துக்குமரன் அட்டென்ஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லா இடத்திலும் மூக்கை நுழைத்து பேசுவார் என்று சொல்லி இருந்தார். அதை தொடர்ந்து தன்னைத்தானே சொல்லிக் கொண்டார். நானும் அட்டென்ஷன் கிடைக்க வேண்டும் என்று எல்லா இடத்திலும் முயற்சி செய்கிறேன். அதனால் வேண்டும் என்று செய்யவில்லை என்றாலும் எனக்குள் இருக்கும் ராணவ் அப்படி செய்ய சொல்கிறார் என்று சொல்லி இருந்தார்.
அடுத்ததாக பேசிய முத்துக்குமரன் பேசும் போது, ராணவ் அட்டென்ஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லா இடத்திலும் மூக்கை நுழைத்துக் கொண்டிருப்பார். ராணவிருக்கு மூன்று வேலை சாப்பாடு வேண்டுமா? அல்லது மூன்று அட்டென்ஷன் வேணுமா? என்றால் எனக்கு சாப்பாடு கூட வேண்டாம் அட்டென்ஷன் மட்டும் கிடைத்தால் போதும் என்று சொல்லிவிடுவான்.
டேவில் டாஸ்க் விளையாடும் போது சத்யாவிடம் பேண்டை கிழித்து அவ்வளவு தொந்தரவு செய்தார். ஆனால் சத்யா கோபப்படாமல் இருந்தார். அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் டாஸ்க் தொடங்குவதற்கு முன்பே சத்யாவிடம் நான் உன்னிடம் என்னென்னவோ பண்ணுவேன் அதை கண்டு கொள்ளாதே என்று டீல் பேசியிருக்கிறான் என்று போட்டுக் கொடுத்திருக்கிறார்.
அது பற்றி விஜய் சேதுபதி ராணவ்விடம் கேட்கும்போது நான் டீல் பேசவில்லை சார் ஆனால் இந்த டாஸ்க் என்ன வேணும்னாலும் நான் பண்ணுவேன் என்று சொன்னேன், அது உண்மைதான் என்று சொல்ல... இதை கேட்டு விஜய் சேதுபதி இப்படியெல்லாம் கூட சொல்லிவிட்டு விளையாடுவீங்களா? என்று அதிர்ச்சியோடு கேள்வி கேட்டிருக்கிறார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications