வினோத் முகத்துக்கு நேரா கால் போட்டது சரி! வெளியே வந்து சீறும் பெட்டி பாம்பு! பிக் பாஸ் ஆதிரையின் திமிர் பேச்சு
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பித்து நான்கு வாரங்கள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில், மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் ஆதிரையின் செயல், ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளாகக் கடினமாக முயற்சி செய்து பிக் பாஸ் வாய்ப்பைப் பெற்ற ஆதிரை, அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வெளியேற்றத்தின் பின்னணி
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆதிரையை நேர்காணல் செய்த விஜே ஜாக்குலின், "முதல் வாரத்தில் ஃபயர் விட்ட உங்களின் ஆட்டம், இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் குறைந்துவிட்டது. மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்த வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லையோ? நீங்கள் வெளியேற என்ன காரணமாக இருக்கும்?" என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
ரசிகர்கள் பார்வை
ஆதிரை வெளியேறியதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், முக்கியமான சில காரணங்கள் ரசிகர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன: FJ உடன் மட்டுமே எப்போதும் கவனத்தை வைத்துக் கொண்டிருந்தது. வீட்டில் அதிகமாக ஆபாச மற்றும் இரட்டை அர்த்தப் பேச்சுக்கள் பேசியது. முதல் வாரத்தில் இருந்த வேகத்தைத் தொடர்ந்து காட்டத் தவறியது.
திமிர் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஆதிரையின் பதில்தான் தற்போது இணையத்தில் பெரும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது. "நான் எனது ஆட்டத்தில் மக்களுக்கு அதிருப்தி கொடுத்ததாக நான் நினைக்கும் விஷயம், கானா வினோத் முகத்திற்கு நேராகக் கால் நீட்டியதுதான்" என்று முதலில் கூறிய ஆதிரை, அதன்பின்னர், "ஆனால் நான் செய்தது சரி. அந்தச் சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படித்தான் நான் நடந்து கொண்டேன். யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டும், எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்று திமிராகப் பேசியுள்ளார்.
முன்னுக்கு பின் முரண்
கானா வினோத் விவகாரம் தொடர்பாக மூன்றாவது வார இறுதியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசியபோது, "தன் மீது தவறு உள்ளது" என்று பெட்டிப் பாம்பு போல அடங்கி ஒப்புக்கொண்ட ஆதிரை, இப்போது வெளியே வந்து, "நான் செய்தது சரிதான்" என்றுப் பேசியிருப்பதுதான் பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
இணையவாசிகள் தரும் நோஸ் கட்
ஆதிரையின் இந்த நேர்காணலைப் பார்த்த இணையவாசிகள், அவரதுப் பேச்சை "சிறுபிள்ளைத்தனமாக" விமர்சித்து வருகின்றனர். "கேமராவுக்காக, கண்டென்ட்டுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று கூறிய ஆதிரை, விஜய் சேதுபதியிடமே இதேபோல், 'யாருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்' என்று கூற வேண்டியது தானே? அப்போது எல்லாம் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டு, இப்போது பேட்டியில் சீறுவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது" என்று ரசிகர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
முதல் வாரத்தில் ஒரு ஸ்டார் பிளேயராக ஜொலித்திருக்க வேண்டிய ஆதிரை, தனதுத் தவறான அணுகுமுறையால் வெளியேறியது மட்டுமல்லாமல், தற்போது வெளியே வந்து வீண் திமிர்ப் பேச்சால், தான் இழந்த ரசிகர்களின் ஆதரவையும் மேலும் இழந்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்!












Click it and Unblock the Notifications