Bigg Boss: "தர்பூசணியை வெட்டி எறிஞ்சிட்டாங்க" திவாகரின் வெளியேற்றத்திற்க்கு சந்தோஷமாக வீடியோ வெளியிட்ட GP முத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல், அதன் உள்ளே இருந்த ஒரு "வாட்டர் மெலன்" ஸ்டாரைப் பற்றித் தான் ஊரெல்லாம் பேச்சு. தனது அடாவடிப் பேச்சுகளாலும், அருவருப்பானச் செயல்களாலும் பலரையும் முகம் சுளிக்க வைத்த திவாகர், ஒருவழியாக இந்த ஒன்பதாவது சீசனில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்! இந்த வெளியேற்றம் பலரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Bigg Boss Bigg Boss tamil Vijay Sethupathi vijay tv

நடிப்பு அரக்கன்

மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில், திவாகர் தான் முதலில் இருந்தே பேசுபொருளாக இருந்தார். "அவர் சும்மாவே இஷ்டத்துக்கு பேசுவார், நடந்துகொள்வார். அவரை கொண்டுபோய் பிக்பாஸ் வீட்டில் விட்டிருக்கிறார்களே" என்று பலரும் எதிர்மறையாகவே பேசினார்கள். "அதெல்லாம் இல்லை, பிக்பாஸை புரிந்துகொண்டு கண்டிப்பாக அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்வார்" என்று ஒருதரப்பினர் சப்போர்ட்டும் செய்தார்கள். ஆனால், வீட்டிற்குள் சென்றதும் எந்த மாற்றமும் இல்லை!

"நான் ஒரு நடிப்பு அரக்கன்" என்று தனது சக போட்டியாளர்களிடம் சொல்லி அவர்களை வெறுப்பேற்றினார். வீட்டுக்குள் இருக்கும் கேமராக்கள் முன்பு நின்றுகொண்டு நடிக்கிறேன் எனச் சொல்லி எதையோ செய்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.
வார இறுதி நாட்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்த நடிகர் விஜய் சேதுபதியையும் இவர் வெறுப்பேற்றுவதையே முழு நேர வேலையாக வைத்திருந்தார். விஜய் சேதுபதி பலமுறை கண்டித்தும், திவாகரின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. "அவர் அவுங்க ஆளு, நான் இவங்க ஆளு" என்று ஜாதி ரீதியிலானக் கருத்துகளை உள்ளேயும் பேசியதாகப் பலரும் விமர்சித்தனர்.

உன் தகுதி என்ன

இதெல்லாம் தாண்டி, வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் தன்னிடம் எது பேச வந்தாலும் உடனே "உங்களது தகுதி என்ன? தராதரம் என்ன?" என்று இஷ்டத்துக்குப் பேசினார். அதை அவர்களும் கண்டித்தார்கள். விஜய் சேதுபதியும் கண்டித்தார். போதாத குறைக்கு விஜே பார்வதியுடன் சேர்ந்தும் இல்லாத கூத்தெல்லாம் அடித்தார். பெண்களின் முடியை முகர்ந்து பார்ப்பது, கைகளைப் பிடித்துப் பேசுவது போன்ற செயல்கள் எல்லை மீறியதாகக் கருதப்பட்டது. நிலைமை இப்படி இருக்க, அவர் விரைவில் வெளியேற்றப்பட வேண்டும் என்பதுதான் ரசிகர்கள் அத்தனை பேரின் கருத்தாக இருந்தது.

"இனியும் திவாகரை விட்டால் செட் ஆகாது" என்று நிகழ்ச்சி குழு எண்ணிவிட்டது போல. எனவே நேற்று அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்புகூட அவர் தனது நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. அவர் வெளியேறியது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையே அளித்தது.

ஆனால், அவர் வெளியேறியபோது விஜே பார்வதி திவாகருக்காக அழுதார். இதைப் பார்த்த ரசிகர்கள், "இதென்னடா பாசமலர் படமே தோற்றுவிடும் போல!" எனப் பங்கமாக கலாய்த்துப் பதிவிட்டு வருகிறார்கள். "திவாகர் ஒருவழியாகப் போனான்" என்று பலரும் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

GP முத்துவின் வீடியோ

இந்நிலையில், யூடியூப் பிரபலமும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஜிபி முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், திவாகரை கடுமையாகத் தாக்கிப் பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். "தர்பூசணி! உன்னை எங்கள் அண்ணன் விஜய் சேதுபதி இரண்டாகப் பிளந்துவிட்டாரா? வசமாக மாட்டினியா? ஆடிய ஆட்டம் என்ன? பேசிய பேச்சு என்ன? அட முட்டாப்பயலே! இப்போ தெரியுதா மக்கள் ஒன்றும் சும்மா கிடையாது. நீ செய்யும் அனைத்தும் வெளியே வரும். நாம்தான் நடிக்கிறோம் என்று நினைக்கிறாய். உன் நடிப்பு எல்லாம் பிசுங்கி, குசுங்கி போச்சா. இப்போ தர்பூசணியை இரண்டாக வெட்டி ரோட்டில் வியாபாரம் செய்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு திவாகர் சினிமா துறையினர் ஒரு சிலரை விமர்சித்து பேசியிருந்தார். அதிலும் நடிகர் சாந்தனு நடிகர் சூரி போன்றவரை பற்றி மிகவும் குறைவாக பேசி இருந்தார். அப்போது ஜி பி முத்து ஒரு வீடியோ வெளியிட்டு திவாகரை விமர்சித்து இருந்தார். அதற்கு விவாகர் ஜி பி முத்துவின் தகுதி தராதரம் இதுதான் அவன் ரேஞ்சுக்கு அப்படி தான் அவன் பேசுவான் என்றெல்லாம் பேசி இருந்தார். இந்த நிலையில்தான் இப்போது திவாகரின் வெளியேற்றத்திற்கு ஜிபி முத்து இப்படி ஒரு வீடியோ வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை காட்டி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+