Bigg Boss: இவங்க நார்மல் பீப்பிள் இல்லயோ! உன்னை கொன்னுடுவேன்னு கத்திய திவாகர்.. முதல் நாளே இப்படியா?
சென்னை: விஜய் டிவியில் நேற்று (அக்டோபர் 5) கோலாகலமாகத் தொடங்கிய 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சியில், மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில், சோஷியல் மீடியா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள்தான் அதிகம். இந்த லிஸ்டில், தனக்குத் தானே 'நடிப்பு அரக்கன்', 'வாட்டர்மெலன் ஸ்டார்' எனப் பட்டம் சூட்டிக்கொண்ட சர்ச்சை நாயகனான டாக்டர் திவாகர் வந்திருப்பதுதான் பெரிய காமெடி!

விஜய் சேதுபதியின் வார்னிங் காற்றில்
திவாகர் மேடையில் அறிமுகமானபோதே, இவரின் முந்தைய சேட்டைகள் அனைத்தையும் அறிந்திருந்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, நேரடியாகவே ஒரு வார்னிங் கொடுத்தார். "உங்களை உங்களுடைய டாக்டர் தொழிலில் உங்களுக்குத் தெரிந்த விஷயத்திற்காகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சோஷியல் மீடியாவில் நீங்கள் பேசிக்கொண்டிருப்பது போல இங்கே பேசக்கூடாது!" என்று எச்சரித்துதான் அனுப்பி வைத்தார்.
ஆனாலும், பிக் பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த திவாகர், அதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை! கேமராவைப் பார்த்ததும், தனக்குத் தெரிந்த நான்கு ஸ்டைல்களை மட்டுமே திரும்பத் திரும்ப ஒவ்வொரு கேமராவிற்கும் காட்டிக்கொண்டிருந்தார். இது முதல் நாளான இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
மாஸ்டர் வசனத்தை பேசிய திவாகர்
இவரின் ஓவர் ஆக்டிங்கின் உச்சகட்டமாக, விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் பேசிய அதே வசனத்தைப் பேசி, அனைவரையும் கடுப்பாக்கினார். அதாவது, விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில், உடம்பெல்லாம் சோப்பு தேய்த்து குளித்துக்கொண்டிருக்கும்போதே நடிப்பார். அதேபோல, திவாகரும் பாத்ரூமிலிருந்து வெளியே வந்து, உடம்பெல்லாம் சோப்பு நுரையுடன் நின்று, விஜய் சேதுபதியின் அதே நடிப்பை காட்டினார்.
திவாகரின் இந்தப் பப்ளிசிட்டி வேட்கையைப் பார்த்த ரசிகர்கள், "ஐயோ போதும்டா சாமி!" என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.
இவரை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள்
திவாகரின் தற்பெருமைக்கு அளவே இல்லை. நடிகர் சூர்யா, சிவாஜி கணேசன் எனப் பலரையும் தன்னுடைய நடிப்புடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். சமீபத்தில் நடந்த ஆணவக் கொலையில் கூட இவர் கருத்து தெரிவித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இப்படி சர்ச்சைகளைக் கொட்டிக் கொண்டே இருக்கும் திவாகர், உள்ளே இருக்கும் போட்டியாளர்களிடம் எல்லாம் போய், "எனக்கு நடிப்பெல்லாம் ஒரு விஷயமே கிடையாது, நான் பெரிய ஆளு தெரியுமா!" என்று பேசுவது, உண்மையிலேயே திறமைக்காகப் போராடும் மற்றவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது.
திவாகர் பேசுவதையும், நடிப்பதையும் சிலர் காமெடியாக எடுத்துக்கொண்டாலும், பலரும் "இரிடேட்டிங்காக இருக்கிறது. இவரை எல்லாம் எந்த அடிப்படையில் இந்த நிகழ்ச்சியில் தேர்வு செய்தார்கள்?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்கு வந்து ஒரு நாள் கூட இன்னும் முடியவில்லை. அதற்குள்ளேயே சோஷியல் மீடியா முழுக்க இவருக்கு எதிராக நெகட்டிவ் வீடியோக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. இருந்தாலும், இந்த சண்டைகளும், சர்ச்சைகளும்தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு டிஆர்பி-யை ஏற்றிவிடுகின்றன. அதனால், இவர் எப்படியும் கடைசிவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் திவாகரின் ஓவர் ஆக்டிங்கை எதிர்த்து, பிக் பாஸ் வீட்டில் முதலில் யாராவது ஒரு மாஸ் பஞ்சாயத்தை ஆரம்பிப்பார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications