Bigg Boss: “யாருங்க நல்லவங்க?” பிக் பாஸ் ஃபினாலே மேடையில் கம்ருதீனை கூப்பிட்டு… கிழிச்சிட்டாங்களே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கிராண்ட் ஃபினாலே என்றாலே கப், கண்ணீர், கட்டிப்பிடிப்பு மட்டும் இல்ல. கூடவே கலகல, குத்தல், கலாய்ப்பு எல்லாமே சேர்ந்துதான் வரும். அந்த மாதிரியான ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான், இந்த சீசனின் கிராண்ட் ஃபினாலே மேடையில் நடந்த "யாரு நல்லவங்க?" என்ற பட்டிமன்றம் நடத்தப்பட்டு இருக்கிறது.
கிராண்ட் ஃபினாலே மேடையிலேயே, கம்ரூதிணை கலாய்த்த மாதிரி, ஒரு முழு பட்டிமன்றமே நடத்தப்பட்டது. தலைப்பு என்னவென்றால், "பிக் பாஸ் வீட்டில் உண்மையிலேயே யார் நல்லவர்கள்?" ஒரு பக்கம் "நல்லவன்" அணியாக முத்துக்குமரன், தீபக் இருவரும் பேசினர். முத்துக்குமரன் பேசிய கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தன.

"நான் நல்லவன் என்று சொல்லிக்கொள்பவன், எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர்களை கஷ்டப்படுத்தாமல் இருப்பவன். ஒருவன் விழப்போகிறான் என்றால் ஓடிப்போய் தூக்கிவிடுபவனே நல்லவன். அவன் விழுந்ததை வைத்து விளையாடுபவன் நல்லவன் கிடையாது" என்று அவர் வாதிட்டார்.
மேலும், "நல்லவன் என்பவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு பயமும் பிரச்சனையும் இல்லாமல் விளையாடுபவன்"
என்றும் கூறினார்.
அதற்கு எதிர்ப்பாக "நல்ல கேமர்" அணியில் மஞ்சரி மற்றும் பிக் பாஸ் டைட்டில் வின்னரான ராஜு பேசினர். மஞ்சரி, "நல்லவன் போல நடித்துக் கொண்டே இருப்பவன்தான் உண்மையில் ஆபத்தானவன். ஒரு நல்ல கேமர் என்றால் பிரச்சனைகளை உருவாக்குவான். தன்னைச் சுற்றி இருப்பவர்களை யார் என்று காட்டுவான். அதுதான் பிக் பாஸ் விளையாட்டு"
என்று வாதிட்டார்.
இந்த விவாதம் முழுவதும் பார்வதி - கம்ருதீன் விவகாரத்தை மையமாக வைத்து நடப்பது போலவே இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். "சூழ்நிலையால் அவர்கள் கோபப்பட்டார்கள்", "அவர்கள் விளையாட்டுக்காக சண்டை போட்டார்கள்", "கடைசியில் இது எல்லாம் ஒரு கேம் தான்" என்று அவர்களின் செயல்களுக்கு மறைமுக விளக்கம் அளிப்பது போல இந்த பட்டிமன்றம் அமைந்திருந்ததாக விமர்சனம் எழுந்தது.
இதற்கிடையில் மாகாபா, "இந்த சீசனில் யாரை உண்மையான நல்லவனாக நினைக்கிறீர்கள்?" என்று மேடையில் இருந்தவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
முதலில் அமித், "நான் நல்லவன். என்னால் யாருக்கும் பிரச்சனை வரக்கூடாது என்று நினைக்கிறவன் நான்" என்று கூறினார்.
அடுத்து துஷார் பேசும்போது, "இந்த சீசனில் நல்லவன் என்றால் அது கம்ருதீன் தான்" என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
பின்னர் ஒருவர் பின் ஒருவராக தங்கள் கருத்து சொன்னார்கள். ஆனால் இங்கேதான் ரசிகர்களின் கோபம் அதிகரித்தது. கம்ருதீனை பினாலே நிகழ்ச்சிக்கு கூப்பிட்டார்கள். ஆனால் கம்ருதீனிடம் நேரடியாக, "நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை.
இதனால் சமூக வலைதளங்களில், "இது பட்டிமன்றமா அல்லது தீர்ப்பளிக்கும் மேடையா?" "முதலில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவார்கள், பிறகு அவர்கள்மேல் எந்தத் தவறும் இல்லை என்று சொல்லுவார்கள்" "விளையாட்டு என்ற பெயரில் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவதற்காகத்தான் இந்த பட்டிமன்றம்" என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
மொத்தத்தில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கிராண்ட் ஃபினாலே மேடை, டைட்டில் வெற்றியாளரை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், "நல்லவன் யார்? நல்ல கேமர் யார்?" என்ற புதிய விவாதத்தையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தி விட்டது. நிகழ்ச்சி முடிந்தாலும், இந்த சர்ச்சை மட்டும் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பேசப்படுவது உறுதி.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications