வரப்போகுது பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி! அதுவும் எப்போ தெரியுமா! தொகுப்பாளர் இவர்தானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து இப்போது பிக் பாஸ் தமிழ் ஒன்பதாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சி முன்கூட்டியே தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முதலில் இந்தியில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, 2017ஆம் ஆண்டு தமிழில் கமல்ஹாசன் தொகுப்பாளராக இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முதல் சீசன் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆரம்பத்தில் விமர்சனங்கள் வந்தாலும் போகப்போக இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு பலரும் ஒரு ஆர்வம் காட்டி வந்தனர். பக்கத்து வீட்டு சண்டையை எட்டி பார்ப்பது போல இந்த வீட்டிற்குள் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பது பலருக்கு பொழுதுபோக்காக இருந்தது.

முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றாலும், ஓவியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. ஓவியாவிற்காக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஆர்மியெல்லாம் ஆரம்பித்தனர். அதுபோல முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் எதார்த்தமாக இருந்தார்கள் என்ற பாராட்டு எப்போதும் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகென் ராவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து, நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும், ஏழாவது சீசனில் அர்ச்சனாவும், எட்டாவது சீசனில் முத்துக்குமரனும் பிக் பாஸ் டைட்டிலை வென்றனர். தற்போது ஒன்பதாவது சீசன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றன. கொரோனா தொற்று பரவிய பிறகு, அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டது.
கடந்த ஐந்து சீசன்களாக அக்டோபர் மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகை வரை இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 முன்கூட்டியே செப்டம்பர் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின்னர் அவர் திரைப்படங்களில் பிஸியானதால், எட்டாவது சீசனில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய முதல் முறையே தன்னுடைய இயல்பான கேள்வி கேட்கும் திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். மக்கள் எதையெல்லாம் போட்டியாளர்களிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை முகத்தில் அடித்தது போல விஜய் சேதுபதி கேட்டு வந்தார். இதனால், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: சத்யாவை வைத்து முத்து குடும்பத்திற்கு செக் வைத்த சிந்தாமணி.. கொடூர பிளான்.. ஆபத்தான ஆட்டம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications