Bigg Boss: பிக்பாஸுக்குள் நடந்த கலவரம்.. அக்ரீமெண்ட் ரகசியத்தை உடைத்த கம்ருதீன்! வெளியேறும் பார்வதி?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், யாருமே எதிர்பாராத ஒரு சம்பவம் இன்று 24 மணி நேர லைவ்வில் நடந்துள்ளது. ஆரம்பம் முதலே சண்டை, சச்சரவுகள், மற்றும் சர்ச்சைகளுக்குப் பெயர் போன இந்த சீசனில், தற்போது பார்வதி, காம்ருதீன், திவாகர் ஆகிய மூவர் சம்பந்தப்பட்டச் சண்டை, மொத்த வீட்டையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

திவாகரின் பார்வதி லவ் டார்ச்சர்
நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே, வாட்டர்மெலன் ஸ்டார் என்று தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்ட திவாகர் தான் ஒவ்வொரு ப்ரோமோவிலும் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். இவர் எப்படியாவது ஒரு பிரச்சனையை இழுத்துக் கொண்டு, கண்டென்ட் கொடுக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் பார்வதியிடம் 'தங்கச்சி' என்று பாசம் கொட்டிய திவாகர், ஒரு கட்டத்தில், "நான் உன்னை லவ் பண்றேன், நீ என்ன லவ் பண்ணு" என்று நச்சரிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பார்வதியே "அண்ணே, நான் உன்னைத் தங்கச்சின்னு சொல்லிட்டு, இப்போ இப்படியெல்லாம் பேசுறியே!" என்று திட்டி இருந்தார்.
அநாகரிக பேச்சு
நான் தான் பெண்களுக்குப் பாதுகாவலன் என்பது போல வெளியேப் பேசும் திவாகர், உள்ளிருக்கும் பெண்களிடம் அநாகரிகமாகவும், முகம் சுளிக்கும் வகையிலும் பேசிக் கொண்டிருக்கிறார். பெண்களின் முடியை முகர்ந்து பார்த்துக்கொண்டு, "தலைமுடி வாசம் அருமையாக இருக்கிறது" என்று வர்ணிப்பது, பெண்கள் மாடர்ன் உடைகள் போட்டால் "வாவ், அப்படி ஸ்ட்ரச்சர் இருக்கு, இப்படி இருக்கு" என்று வர்ணிப்பது எல்லாம் இவர் தொடர்ந்து செய்யும் வேலை.
விலகிய பார்வதி
கடந்த சில நாட்களாகவே பார்வதி காம்ருதீனுடன் மிகவும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் பேசுவது18 பிளஸ் கண்டென்ட்டாகவே இருக்கிறது என்று இணையத்தில் அதிகமாக ட்ரோல் வந்தது. ஆனால், திடீரெனச் சுதாரித்துக் கொண்ட பார்வதி, கம்ருதீனை விட்டு விலகத் தொடங்கிவிட்டார். மேலும், கம்ருதீன் தன்னிடம் அட்வான்டேஜ் எடுத்துப் பழகுகிறார், அவர் தொட்டுப் பேசுவது வேற மாதிரி இருக்கு என்று திவாகரிடம் பார்வதி புகார் சொல்லி இருந்தார்.
ரகசியத்தை உடைத்த காம்ருதீன்
காம்ருதீன் தனது நெகட்டிவ் விளையாட்டை மாற்றிக் கொண்டு, ஜாலியாக இருக்கத் தொடங்கியிருந்த நிலையில், இந்தச் சண்டை மூவரையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. கம்ருதீன் நிற்கும் இடத்தில் திவாகர் சென்று, "இன்னைக்கு இந்த வாரம் ஒருத்தனுக்கு பிரச்சனை இருக்கு, அதுவும் பொம்பள பிரச்சனை!" என்று சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டே இருந்தார்.
காம்ருதீன் வெடிப்பு
அப்போது காம்ருதீனை முறைத்துக் கொண்டிருந்த பார்வதியைப் பார்த்து அலர்ட் ஆன காம்ருதீன், "எதற்காக இப்படி முறைச்சுட்டு இருக்கீங்க? எதுவும் பிரச்சனையா?" என்று கேட்க, பார்வதி "நான் அப்படி தான் பாப்பேன் நீ கேள்வி கேட்க கூடாது" என்று திமிராகப் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான கம்ருதீன், "இப்போ விளையாட்டை எப்படி விளையாடணும்னு தெரிஞ்சிருச்சு. இனி என் ஆட்டத்தை நான் காட்டுகிறேன்! நாம் ரெண்டு பேரும் மியூச்சுவலா பேசிதானே பழகினோம். ஆனா, இப்போ ஏதோ உனக்கு விருப்பமில்லாம நான் மட்டும் உன்கிட்டப் பழகுன மாதிரி நீ சீன் போட்டுக்கிட்டு இருக்கிற! இவன் என்ன குற்றவாளி மாதிரி பேசுறான். உன்னுடைய Ex மாதிரி இருக்கிற, அதனால உன்னைப் பிடிக்கும் என்று நான் உன்கிட்டயே சொன்னேன். அதற்கு நீயும் அக்செப்ட் பண்ணி தானே பேசிட்டு இருந்தா! அப்புறம் இதெல்லாம் இங்கே வேண்டாம், வெளியில பார்த்துக்கலாம்னு சொன்னே. நானும் சரின்னு சொன்னேன். ஆனா, இந்த விஷயத்தை எல்லாம் எப்படி இன்னொருத்தன் கிட்ட சொல்லலாம்!" என்று மொத்த ரகசியத்தையும் போட்டு உடைக்கிறார்.
பார்வதியின் அதிர்ச்சி முடிவு
இந்த வெளிப்படையானத் தாக்குதலால் கோபமான பார்வதி, திவாகர் தன்னைப் பற்றி எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார் என்று அவர் மீது கோபத்தைக் கொட்டிவிட்டார். 24 மணி நேர லைவ்வில் பார்வதி, காம்ருதீன், திவாகர் மூன்று பேருமே ஆளாளுக்குக் கத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில், பார்வதி பற்றிய ரகசியம் எல்லாம் வெளியே தெரிந்ததும் "நான் வெளியே போறேன்!" என்பது போலச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கம்ருதீன் மாற்றம் வரவேற்பு
கம்ருதீனின் பழைய நெகட்டிவ் விளையாட்டு பிடிக்காமல் ரசிகர்கள் 'ரெட் கார்டு' கொடுக்க வேண்டும் என்றுச் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் 'மியூச்சுவலான விஷயங்களைப் பேசி, விளையாட்டை மாற்றியிருப்பது மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் பார்வதி வெளியே போவாரா அல்லது இதுவும் ஒரு கண்டென்ட் டிராமா தானா என்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம். தற்போது திவாகருக்குத்தான் அதிகமான நெகட்டிவ் உருவாகிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications