பிக் பாஸ்க்குள் திவாகர் சொன்ன வார்த்தை! ரவுண்டு கட்டிய சக போட்டியாளர்கள்! கதறி அழுத ரம்யா ஜோ
சென்னை: விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி, இரண்டாவது நாளான இன்று (அக்டோபர் 7) வெளியான முதல் ப்ரோமோவிலேயே பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. காரணம், வேறு யாரும் இல்லை; நம்ம 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகர் தான்!

திவாகரின் புது பில்டப்
டாக்டர் திவாகர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து, வெளியுலகில் எப்படிப் பில்டப் கொடுத்துச் சர்ச்சையில் சிக்குவாரோ, அதேபோலத்தான் உள்ளேயும் பேசிக்கொண்டிருக்கிறார். நேற்று இவருக்கும், சீரியல் நடிகர்கள் ஹம்ருதீன், கெமி மற்றும் பிரவீன் ஆகியோருக்கும் இடையே நடந்த குறட்டைச் சண்டையில், "இனி என் விஷயத்தில் யாரும் மூக்கை நுழைக்கக் கூடாது" என்று திவாகர் டென்ஷன் ஆகியிருந்தார்.
இன்றைய சலசலப்புக்குக் காரணம், "நான் தான் இந்த வீட்டிலேயே அதிகமாகப் படித்தவன்!" என்று திவாகர் பேசிக்கொண்டதுதான். திவாகரின் இந்தப் பேச்சு, உழைப்பால் போராடி முன்னேறிய மற்ற போட்டியாளர்களைக் கடுப்பேற்றிவிட்டது.
ரம்யா ஜோவின் கண்ணீர்
திவாகர் தனது தற்பெருமையைத் தொடர, மேடை நடனக் கலைஞரான ரம்யா ஜோ அவரைக் கேள்வி கேட்டார். ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து, பல கஷ்டங்களை அனுபவித்து வந்த ரம்யா ஜோ, "திவாகர் விஷயத்தில் இருந்தாலும் யாராக இருந்தாலும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு திவாகர் சொல்றாரு. ஆனா, இவர் மட்டும் எல்லாவற்றிலும் மூக்க விட்டு, இது சரி, அது தப்புன்னு சொல்லுவாரா? இது எப்படி நியாயம்?" என்று நியாயம் கேட்டார்.
உடனடியாக, திவாகர் மிகவும் தரக்குறைவாக, "நீ படிச்ச பொண்ணு தானா? என்ன படிச்சிருக்க?" என்று ரம்யா ஜோவைக் கேட்க, அங்கே பெரிய சலசலப்பே ஏற்பட்டது. திவாகரின் இந்தக் கேள்வியால் மனம் உடைந்த ரம்யா ஜோ அழுதுகொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.
FJ-யின் கோபம்
ரம்யா ஜோவிடம் திவாகர் பேசியதைக் கேட்டு அங்கு இருந்தவர்களுக்குக் கடும் கோபம் வந்தது. குறிப்பாக, நடிகர் FJ டென்ஷன் ஆகி, "படிப்பைப் பத்தி நீங்க பேசுறீங்க... நான் என்ன படிச்சிருக்கேன்னு தெரியுமா?" என்று கத்தினார். மேலும், அவர் ஆவேசத்தில் திவாகரை அடிக்கப் போவது போல அருகில் சென்று சண்டை போட்டார்.
உள்ளே இருக்கும் சக போட்டியாளர்கள் பலரும் திவாகருக்கு எதிராகவே கோஷமிட்டனர். இந்த ப்ரோமோதான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சமூக வலைதளங்களில், "டாக்டர் திவாகர், நீங்க பிசியோதெரபி படித்தது, மத்தவங்க கிட்ட 'நீ என்ன படிச்சே?'ன்னு கேட்கவா?" என்றும், "முதல் வாரமே இத்தனை சண்டையை ஆரம்பிச்ச இவரை, டி.ஆர்.பி.க்காகக் கடைசிவரைக்கும் காப்பாத்துவாங்க போல!" என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.
இரண்டாவது நாளே தொடங்கியுள்ள இந்தக் கடுமையான சண்டைகள், இந்த சீசனின் ஆட்டத்தை எந்த அளவுக்கு சூடேற்றும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications