பிக் பாஸ் தமிழ் 9 போட்டியாளர்கள் இவங்க தானா? கசிந்த தகவல்! அப்போ இந்த முறை பெரிய சம்பவம் இருக்கு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்றும் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில், சில போட்டியாளர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

பக்கத்து வீட்டு சண்டை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்குமோ அவங்களுக்கெல்லாம் வீட்டுக்குள்ளேயே அமர்ந்தபடி அடுத்த வீட்டில் நடக்கும் சண்டையை பார்க்கும் வகையில் வடிவமைத்து வைத்தது தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. இது ஆரம்பத்தில் அதிகமான விமர்சனங்களை சந்தித்தாலும் இப்போது இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டே இருக்கிறது. தமிழில் இதுவரைக்கும் 8 சீசன் முடிவுக்கு வந்து இருக்கிறது. ஆரம்பத்தில் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இப்போது கிடைக்கவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியை கலாய்ப்பதற்காகவும் ட்ரோல் செய்வதற்காகவும் சிலர் பார்த்து வருகிறார்கள். ஆனால் ஒரு சிலர் இந்த நிகழ்ச்சிக்கு தீவிரமான ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.
யார் தொகுப்பாளர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை, நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டிருக்கிறது. கடந்த சீசனையும் அவரே தொகுத்து வழங்கினார். முதல் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், விஜய் சேதுபதியின் தொகுப்பு முறை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
போட்டியாளர்கள் பட்டியல்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் யார் யார் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்ற அதிகாரபூர்வ பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. எனினும், சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. அதில், குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் உமைர் லத்தீஃப், சபானா ஷாஜஹான், வி.ஜே. பார்வதி, அம்ருதா ஸ்ரீனிவாசன், அக்ஷிதா அசோக், பால சரவணன், பாக்கியலட்சுமி சீரியல் நேகா ராஜேஷ் மேனன், சதீஷ் கிருஷ்ணன், வினோத் பாபு, புவி அரசு ஆகியோரின் பெயர்கள் அதிகம் அடிபடுகின்றன. மேலும், நடிகை ஃபரினா ஆசாத் மற்றும் நடிகை பூனம் பஜ்வா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வினோத் பாபு
இதில் ஒரு சில போட்டியாளர்களின் பெயர் ஒவ்வொரு சீசனும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. வினோத் பாபு பெயர் கடந்த சீசனிலே அடிபட்டது. அவர் அந்த நேரத்தில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து முடித்து இருந்தார். அப்போது இவரும் அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த பவித்ராவும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் கடைசியில் பவித்ரா மட்டும்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வினோத் பாபு கலந்து கொள்ளவில்லை. இப்போது அவர் பெயர் தற்போதைய ஒன்பதாவது சீசனிலும் அடிபடுகிறது. வினோத் பாபு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு காமெடி, பாடல், மிமிக்கிரி என்று பல திறமைகளை காட்டி இருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியில் வந்தால் என்டர்டைன்மென்ட்க்கு குறைவிருக்காது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் போட்டியாளர்கள் பட்டியல் அடங்கிய ப்ரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications