Bigg Boss Tamil 9: பிக் பாஸ் 9 எப்போது தொடங்க போகிறது? லீக்கான தகவல்! விஜய் சேதுபதியின் மாஸ்டர் பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த முறை விஜய் சேதுபதி மீண்டும் தொகுப்பாளராக வருவது உறுதியாகிவிட்ட நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்ற தேடல் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்க போகிறது என்ற தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.

Bigg Boss 9 Tamil Bigg Boss Tamil Bigg Boss Tamil Season 9 9

பிக் பாஸ் - ஒரு கொண்டாட்டம்

2017-ஆம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய முதல் சீசனில் இருந்து, இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு பெரிய பொழுதுபோக்கைக் கொடுத்து வருகிறது. ஆரம்பத்தில் உண்மை வெளிப்படும் என்ற கோஷத்துடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, பல பிரபலங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

பிக் பாஸ் டைட்டில் வின்னர்ஸ் (சீசன் 1 முதல் 8 வரை)

சீசன் 1: ஆரவ், சீசன் 2:ரித்விகா, சீசன் 3: முகேன் ராவ், சீசன் 4: ஆரி, சீசன் 5: ராஜு ஜெயமோகன்,சீசன் 6:அசீம், சீசன் 7: அர்ச்சனா, சீசன் 8: முத்துக்குமரன் போன்றோர் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பிக் பாஸ் வெற்றி பெற்ற பிறகு, பலர் சினிமாவிலும், சின்னத்திரையிலும் ஜொலித்து வருகின்றனர். ஆரி, ராஜு போன்றோர் வெற்றிக்குப் பிறகு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகின்றனர்.

கண்டெண்ட் கொடுத்த பிரபலங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியமான அம்சம், போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் சண்டைகள், காதல், நட்பு, மற்றும் கண்ணீர் என அனைத்தும். குறிப்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்ட சில சம்பவங்கள்: முதல் சீசனில் ஜூலியும், ஓவியாவும் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டது. ஓவியாவும் ஆரவ்வும் காதலில் விழுந்ததும், ஆரவ் ஓவியாவைத் தவிர்த்ததும். முதல் சீசனில் பெரிதாக பேசப்பட்டது.

கவின் - லாஸ்லியா

கவின், லாஸ்லியா, அபிராமி என முக்கோணக் காதலில் சிக்கியது பற்றி அதிகமாக பேசப்பட்டது. அதுபோல பாலாஜி முருகதாஸுக்கும் ஆரிக்கும் இடையே நடந்த வாக்குவாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. அசிம் மற்றும் விக்ரமனின் ஆக்ரோஷமான சண்டைகளும் அதிகமான டிஆர்பி பெற்றது.

சீசன் 9 - தொகுப்பாளர் மற்றும் போட்டியாளர்கள்

கடந்த சீசனை போல இந்த சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார். அக்டோபர் 3-ஆம் தேதி, விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று, வீடு எப்படி இருக்கிறது என்று காண்பிக்கவிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 4-ஆம் தேதி முதல் எபிசோடு ஷூட்டிங் நடைபெறுகிறது, அக்டோபர் 5-ஆம் தேதி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் கலந்துகொள்ளும் சில போட்டியாளர்களின் பட்டியல் இதோ: ரேஷ்மா: டான்ஸ் மாஸ்டர், வி.ஜே. வைஷு- நடிகர் நாஞ்சில் விஜயன் விவகாரத்தில் சிக்கியவர், விக்னேஷ்- யூடியூபர், நயீம்- சீரியல் நடிகர் மனிஷா- நடிகை போன்ற பெயர் புதிதாக அடிபடுகிறது‌ அவர்களோடு வழக்கம் போல சில விஜய் டிவி பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்று இருக்கிறது. இந்த முறை, யார் யார் வீட்டிற்குள் போவார்கள், யார் டைட்டில் வின்னர் ஆவார்கள், என்னென்ன சர்ச்சைகள் வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+