Bigg Boss: பிக் பாஸில் கடைசி குறும்படம்.. வியானா, பிரவீனை ஓடவிட்ட விஜய் சேதுபதி! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் 2017ஆம் ஆண்டு தொடங்கி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, எட்டு சீசன்களை கடந்த நிலையில் தற்போது 9ஆவது சீசனில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்ப காலங்களில் சமூக பரிசோதனை, மனநிலை விளையாட்டு, மனித உறவுகள் என பேசப்பட்ட இந்த நிகழ்ச்சி, இப்போது பலரின் பார்வையில் "யார் அதிக சத்தம் போடுறாங்க?" என்ற போட்டியாக மாறிவிட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள் என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால், "எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் மோசம்" என்பதே பல ரசிகர்களின் ஒரே குரலாக இருக்கிறது. காரணம் விளையாட்டை விட வாக்குவாதம், டாஸ்க்கை விட தனிப்பட்ட குற்றச்சாட்டுகள், ஸ்ட்ராட்டஜியைவிட ஸ்ட்ரெஸ் தான் ஸ்பெஷலாக இருக்கிறது.

ஆரம்பமே சர்ச்சை
இந்த சீசனின் ஆரம்ப நாட்களிலேயே வி.ஜே. பார்வதி - வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் கூட்டணி வீட்டையே ஒரு மினி கோர்ட்டாக மாற்றியது. எதற்கெடுத்தாலும் சண்டை, அதிலும் கெட்ட வார்த்தைகள் என விதிமீறல்கள் தொடர்ச்சியாக நடந்தது. "பிக் பாஸ் வீடா இது? பஸ் ஸ்டாண்ட் பஞ்சாயத்தா?" என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு பார்வதி ஆடிய ஆட்டம் அனைவரையும் எரிச்சலடைய வைத்தது.
பின்னர் திவாகர் வெளியேற, கம்ருதீனுடன் லவ் கேம்... அதற்குப் பிறகு ரெட் கார்டு, நேரடி வெளியேற்றம். ஒரு கட்டத்தில் "பார்வதி அல்லது கானா வினோத் தான் டைட்டில் வின்னர்" என்ற கணிப்புகள் பரவின. ஆனால் பார்வதி அவுட், கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேற... பிக் பாஸ் ரசிகர்களுக்கே "நாம என்ன கணக்குப் போட்டோம்... பிக் பாஸ் என்ன கணக்குப் போடுறார்?" என்ற குழப்பம்.
வின்னர் ரேஸ்
தற்போது டைட்டில் வின்னர் ரேஸில் அரோரா முன்னிலையில் இருப்பதாக பேசப்படுகிறது. அதே நேரத்தில், பிக் பாஸ் வீட்டுக்குள் முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டதால், விளையாட்டை விட பழைய கணக்குகளைத் தீர்க்கும் மேடையாக வீடு மாறியுள்ளது.
குறிப்பாக வியானா - விக்ரம் விவகாரம் மீண்டும் தீப்பிடித்துள்ளது. நேற்றைய எபிசோடில், வியானா விக்ரம் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு பேசினார். தல கேமில் ஆதிரையை கீழே தள்ள முயன்றது முதல் பல விஷயங்களை சொல்ல, "அவர் சாரி கேட்டுவிட்டாரே" என்று விஜய் சேதுபதி இடையில் கூறினார். அதற்கு, "எல்லாம் செய்துவிட்டு சாரி கேட்டால் எல்லாம் சரியா?" என்று வியானா திருப்பிக் கேட்டது வீட்டையே சூடாக்கியது.
இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, "இங்கு யாருக்கும் பாரபட்சம் இல்லை. ஒருவருக்கு தனியாக இடம் கொடுத்தால் அது ஷோவிற்கே துரோகம்" என்று தெளிவாக கூறினார்.
Bigg Boss: கார் டாஸ்க்கில் சான்ட்ரா போட்டது நாடகம்.. ஆதாரத்துடன் பேசிய திவ்யா கணேஷ்.. கேம் மாறி போச்சு
விஜய் சேதுபதி வெளியேறிய பிறகு, "வெளியே போய் இதைப்பற்றி பேசிக்கலாம்" என்று வியானா சொன்னது தான் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. "இது டிவி ரூல்ஸுக்கு எதிரான பேச்சு", "பிக் பாஸ் வீடு இப்போ ரியாலிட்டி ஷோ இல்ல, ரியாலிட்டி சர்ச்சை" என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த சீசனின் கடைசி குறும்படம் என்று விஜய் சேதுபதி சொல்ல, எல்லோரும் ஆர்வத்தோடு காத்திருக்க, அப்போது வியானா, விக்ரம் மற்றும் அரோரா இருவரும் சேர்ந்துதான் தான் கானா வினோத் மனதை மாற்றி பணப்பெட்டி எடுக்க வைத்தார்கள் என்று பேசியது காட்டப்படுகிறது.
அதைத் தொடர்ந்து பிரவீன், விக்ரம் பற்றி பேசியதையும் காட்டப்படுகிறது. இது குறித்து தான் இன்று விஜய் சேதுபதி விசாரிக்கிறார். அப்போது தான் பேசியது தவறு இல்லை என்பது போல பிரவீன் பேச இந்த ஆட்டிட்யூட் எல்லாம் இங்க காட்டாதீங்க, இதெல்லாம் வெளிய பேசிக்கோங்க இது நல்லா இல்ல என்று மிரட்டுற மாதிரி விஜய் சேதுபதியும் பேசி இருக்கிறார்.
இந்த சீசனில் டாஸ்க்குகள் பின்னணிக்கு தள்ளப்பட்டு, சண்டைகளே முன்நிலைக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். "பெயர் பிக் பாஸ்... நடக்குறது சின்ன சின்ன சண்டை" என்ற கமெண்ட் தான் இப்போது வைரல். பிக் பாஸ் 9 உண்மையிலேயே விளையாட்டுக்கு திரும்புமா, இல்லை சர்ச்சைகளின் சுழலில் சிக்கியே முடிவை அடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications