Bigg Boss: கார் டாஸ்க்கில் சான்ட்ரா போட்டது நாடகம்.. ஆதாரத்துடன் பேசிய திவ்யா கணேஷ்.. கேம் மாறி போச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் நடந்த சம்பவத்தை யாரும் இவ்வளவு சீக்கிரம் மறந்து இருக்க முடியாது. கார் டாஸ்க்கில் பார்வதி மற்றும் கம்ருதீன் சான்ட்ராவை காரில் இருந்து கீழே தள்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் சோசியல் மீடியா முழுக்க கொந்தளித்தனர்.
இதனால் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவத்தை வைத்துதான் இப்போது மீண்டும் ஒரு விவாதம் கிளம்பி இருக்கிறது.

அதாவது இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்த சான்ட்ரா தான் இப்போது பலருக்கும் வில்லியாக தெரிகிறார். ஆரம்பத்தில் இவர் உள்ளே சென்றால் விளையாட்டு மாறும் என்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் உள்ளே போறதும் விளையாட்டு வேறு விதமாக மாறிவிட்டது.
உள்ளே சான்ட்ரி அடுத்த பார்வதி போல தான் நடந்து கொண்டார். இதனால் அதிகமான விமர்சனங்களையும் சந்தித்து வந்தார். அதோடு விஜய் சேதுபதி அவருக்கு கரிசனம் காட்டுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தது. அதுபோல சான்ட்ராவின் கணவர் பிரஜன் சில வாரங்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
Bigg Boss: சான்ட்ரா செய்தது சரியில்ல.. கம்ருதீன் மன்னிப்பு கேட்டபோது இதுதான் நடந்தது! உடைத்து பேசிய சுபிக்ஷா
அதற்குப் பிறகு சான்ட்ரா உள்ளே இருப்பவர்கள் மீது கடுமையாக கோபத்தை காட்டிக் கொண்டிருந்தார். நான் சோகமாக இருக்கிறேன் யாரும் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்று நினைப்பது போலத்தான் நடந்து கொண்டார். அதிலும் அதுவரைக்கும் சான்றாவுடன் பிரண்டாக இருந்த திவ்யா கணேஷுக்கும் தன்னுடைய கணவருக்கும் நெருக்கம் இருப்பதாக கூட சான்ட்ரா பேசி வந்தார்.
இதுதான் இப்போது அவருக்கே வினையாக மாறி இருக்கிறது. கார் டாஸ்க்கில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் சான்ட்ராவை அடித்து வெளியே தள்ளியதற்கு ஒட்டுமொத்த பிக்பாஸ் டீமும் சான்ட்ராவிற்கு சப்போர்ட்டாக இருந்தனர். ஆனால் இப்போது எலிமினேஷனான போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர். அவர்கள் உள்ளே என்ன நடந்தது என்பதை பற்றி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது சான்ட்ரா பிரஜன் உடன் திவ்யாவிற்கு அஃபர் இருக்கிறது என்று வியானாவிடம் சொன்ன விஷயத்தை இப்போது வியானா திவ்யாவிடமே சொல்லிவிட்டார். இதை கேட்டதும் கடுப்பான திவ்யா நேற்று இரவு முழுக்க அழுது கொண்டு இருந்தார். சான்ட்ராவுக்காக நான் எவ்வளவு சப்போர்ட் செய்தேன், ஆனா அவங்க என்னை இவ்வளவு மோசமா நினைச்சு இருக்காங்களே என்று திவ்யாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கூட இந்த பஞ்சாயத்து தான் வந்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு யாருடன் நான் பேசவே மாட்டேன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை பிக் பாஸ் கொளுத்தி போட, அதை வைத்து திவ்யா சான்ட்ராவின் முகத்துக்கு நேராகவே இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே சென்று சான்ட்ராவுடன் பேசவே மாட்டேன் என்று சொல்லி இருந்தார்.
அவங்க என்னை எவ்வளவு மோசமா நினைச்சிருக்காருகிறது எனக்கு இப்பதான் தெரியவந்தது என்ற சொல்லியிருந்தார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவிலும் சான்ட்ராவுக்காக, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன். இந்த வார நாமினேஷனில் கூட அவருக்காக நான் மிளகாய் சாப்பிட்டேன். அவங்க எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் இருக்கணும்னு நினைச்சேன்.
ஆனா அவங்க என்னை பத்தி இப்படி பேசி இருக்காங்க என்று நினைத்து பார்த்தாலே எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு. கார் டாஸ்க் கூட சான்ட்ரா நடிச்சாங்களோ என்று தான் எனக்கு தோன்றுகிறது என்று ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். திவ்யா சொல்வது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது சான்ட்ரா பாவம் என்று நினைக்கிறீர்களா பாஸ்..
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications