Bigg Boss: சான்ட்ரா செய்தது சரியில்ல.. கம்ருதீன் மன்னிப்பு கேட்டபோது இதுதான் நடந்தது! உடைத்து பேசிய சுபிக்ஷா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை பார்வதி மற்றும் கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அது குறித்த விமர்சனம் சோசியல் மீடியாவில் அதிகமாக இருக்கும் நிலையில் அது பற்றி இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்ட சுபிக்ஷா தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பஞ்சாயத்துக்கு குறைவே இல்லாமல் தான் இருந்தது. அடிக்கடி சண்டை சச்சரவுகள் தான் ப்ரோமோகளில் காட்டப்பட்டது. அதிலும் இந்த நிகழ்ச்சியில் ப்ரோமோக்களில் அதிக இடம் பிடித்தது பார்வதி தான். கடைசியில் பார்வதிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவே கொந்தளித்தது.

கடைசியாக அனைவரும் எதிர்பார்த்தபடி கம்ருதீன் மற்றும் பார்வதிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதற்கு பிறகு நிலமை அப்படியே நிலைமை மாறிவிட்டது. பார்வதி என்ன பெரிய தப்பா பண்ணிட்டாங்க? அவங்களுக்கு எதற்காக ரெட் கார்டு என்று அதிகமானோர் குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர். என்னங்க என்ன பண்ணுனாலும் அடிக்கிறீங்கன்னு.. சொல்ற மாதிரி விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் டீமுக்கு என்ன பண்றதுன்னு தெரியாத நிலைமைதான் இருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையில் கண்டிப்பாக பார்வதிக்கு மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று பலர் குரல் எழுப்பி வந்தனர். ஆனால் ரெட் கார்டு கொடுத்ததும் சான்ட்ரா நாடகம் போடுகிறார் என்று அவர் மீது அதிக கோபம் வர தொடங்கிவிட்டது.
கார் டாஸ்க்கில் பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் சான்ட்ராவை அடித்து தள்ளியது தவறு என்றாலும் அதற்கு பிறகு ரெட்கார்ட் கொடுத்ததும் கம்ருதீன் மன்னிப்பு கேட்டு இருந்தார். அப்போது அவரை பார்த்து சான்ட்ரா கதறி அழுதது, நடிப்பு என்று விமர்சனம் எழுந்து வரும் நிலையில் இது பற்றி சுபிக்ஷா பேசும்போது பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் காருக்குள் செய்த செயல் சரி என்று நான் சொல்லவே மாட்டேன்.
அவங்களுக்கு ரெட் கார்டு கொடுத்தது சரிதான். ஆனால் கம்ருதீன் மன்னிப்பு கேட்கும் போது சான்ட்ரா அழுதது எனக்கு சரியா படல. அதற்கு முன்பு காரில் இருந்து விழுந்த சான்ட்ராக்கு பேனிக் அட்டாக் வந்ததெல்லாம் உண்மைதான். ஆனால் அதற்குப் பிறகு கம்ருதீன் காலில் விழுந்தும் அதை கண்டு கொள்ளாமல் பயந்து அழுதது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிந்தது என்று சுபிக்ஷா பேசியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications