Bigg Boss: பிக் பாஸில் பிரஜனை வெளியேற்ற காரணம் இதுதானா? பரிதாபங்கள் சுதாகரின் வீடியோ, கடுப்பான விஜய் சேதுபதி?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரஜனை அதிரடியாக வெளியேற்றி இருக்கிறார்கள். அவர் வாக்குகள் அடிப்படையில் அதிகமாக பெற்று இருந்தாலும் அவரை வெளியேற்றியதற்கு காரணம் இதுதான் என்று சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்ப்போம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பிக்காகத்தான் ஒவ்வொரு வாரமும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு முந்தைய சீசன்கள் போல இந்த சீசன் இல்லை என்பது பலருடைய கருத்தாகவும் இருக்கிறது. அதை மாற்றுவதற்காக பிக்பாஸில் பல டாஸ்குகள் கொடுக்கப்பட்டாலும் அதையும் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் சண்டை போட்டு சொதப்பி விடுகிறார்கள்.

ஒவ்வொரு சீசனிலும் ஒரு அன்ஃபார் எவிக்ஷன் நடக்கும். அதே போலத்தான் இந்த சீசனிலும் ஒரு எவிக்ஷன் நடந்து இருக்கிறது. இரண்டு வாரத்திற்கு முன்பு பிரஜனுடைய விளையாட்டை பார்த்து ரசிகர்கள் எல்லோருமே காண்டாகி இருந்தனர். அதனால் விஜய் சேதுபதியும் மேடையில் பிரஜனை திட்டி இருந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்தது.
விஜய் சேதுபதியை ஒரு தொகுப்பாளர் என்று பார்க்காமல் பிரஜன் திமிர் ஆகவே பேசிக் கொண்டிருந்தார். நீங்கதான் சண்டை போடுங்க, கோபப்படுங்க என்று சொல்லுறிங்க.. இப்போ நீங்களே ஏன் இப்படி பண்ணுகிறீர்கள் என்று கேட்கிறீர்களே? என்று கூட கேட்டிருந்தார். அதற்கெல்லாம் கடுப்பான விஜய் சேதுபதி சார் சொல்லுங்க சார் சொல்லுங்க சார் என்று பேசியிருந்தார். தலைவன் தலைவி படத்தில் எப்படி விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் சொல்லுங்க சார் என்று பேசி சண்டை போடுவார்களோ அதே போலத்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட இவர்கள் சண்டை போட்டு இருந்தனர்.
இது ஒரு பக்கம் இருக்க அந்த பஞ்சாயத்து முடிந்த பிறகு பிரஜன் விளையாட்டு நன்றாகவே மாறி இருந்தது. ஆனாலும் இரண்டு வாரம் கழித்து நேற்று இவரை வெளியேற்றியதற்கான காரணம் விஜய் சேதுபதி தான் என்று ஒரு செய்தி பரவி வருகிறது. தன்னிடம் பிரஜன் எதிர்த்து பேசியதால்தான் அவரை வெளியேற்ற சொல்லிவிட்டார் என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முக்கியமான காரணம் சான்ராவின் விளையாட்டை வெளிக்காட்டுவதற்காக தான் என்றும் கூறப்படுகிறது.
அதோடு பிரஜன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சண்டை போட்டது, சான்ரா அழுதது போன்றவற்றையெல்லாம் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் கோபி சுதாகர் கலாய்த்து வீடியோ வெளியிட்டு இருந்தனர். அதில் ஒரு இடத்தில் 30 தடவைக்கு மேல சார் சார்ன்னு சொல்லி கொல்லுறானே என்று பிரஜன் சொல்வது போல இருந்திருக்கிறது. இந்த காட்சியைப் பார்த்தது தான் விஜய் சேதுபதி வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதுபோல பிரஜன் மற்றும் சான்ரா இருவரும் கணவன் மனைவியாக இந்த வீட்டிற்குள் வந்தனர். சான்ராவை கூட சில இடங்களில் பிரஜன் விட்டுக் கொடுத்திருக்கிறார். ஆனால் சான்ரா அப்படி செய்யவே இல்லை அதனால் பிரஜனை வெளியே அனுப்பினால் அதற்கு முக்கிய காரணமான உள்ளிருக்கும் போட்டியாளர்களோடு சான்ரா வாக்குவாதத்தில் ஈடுபடுவார், அல்லது பிரச்சனை ஏற்படுத்துவார் என்பதற்காகத் தான் பிரஜனை வெளியேற்றியதாகவும் கூறப்படுகிறது.
ஃபேமிலி டாஸ்கில் பிரஜன் தன்னுடைய குழந்தைகளோடு இந்த வீட்டிற்குள் வரும்போது சான்ராவின் ரியாக்ஷனை பார்த்து அவருக்கு அனுதாப அலை கூடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நேற்று பிரஜன் வெளியே போனதுமே சான்ரா கடும் அப்செட்டில் இருந்தார். இதுவரைக்கும் நட்பாக இருந்த திவ்யாவிடம் கூட கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். இதேபோல அவர் உள்ளிருக்கும் எல்லாரிடமும் நடக்கப் போகிறாரா? இல்லையா? என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications