Bigg Boss 9: ஆரம்பமே அமர்க்களம்! பிக் பாஸ் 9ன் முதல் போட்டியாளர் "அவர்”தானாம்! அப்போ காமெடிக்கு பஞ்சமே இருக்காது!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 8 சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து வரும் அக்டோபர் மாதத்தில் ஒன்பதாவது சீசன் தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் விஜய் சேதுபதி தான் தொகுப்பாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளர் யார் என்று தகவலும் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி பழமொழிகளிலும் ஒளிபரப்பாகி வந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகமான வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள்? அவராக இருக்குமோ? இவராக இருக்குமோ? என்ற ஒரு பேச்சு இணையத்தில் தொடங்கிவிடும்.
அறிவிப்பு வந்தாச்சு
அதுபோல கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிக் பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்விகளும் இணையத்தில் ரசிகர்களால் தேடப்பட்டு வருகிறது. வழக்கம்போல ஒரு சில போட்டியாளர்களின் பெயர் இந்த சீசனிலும் அடிபட்டு வருகிறது. அவர்கள் வருவார்களா? இல்லையா? என்பது ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்கள் கேட்கும் கேள்வியாக இருந்தாலும் இந்த சீசன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்பதால் போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
பிக் பாஸ் ஒன்பதாவது சீசன்
இந்த சீசனில் சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களும் சமூக வலைதள பிரபலங்களும் கலந்து கொள்வதால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த சீசனில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வந்து போட்டியாளர்களை மிரள வைத்து விட்டார். வார இறுதி நாட்களில் ஹெட் மாஸ்டருக்கு பயப்படும் ஸ்டூடண்ட் போலவே எல்லா போட்டியாளர்களும் பயப்பட்டு இருப்பார்கள்.
பிக் பாஸ் 9 சீசன் போட்டியாளர்கள்
ரசிகர்கள் என்ன கேட்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த கேள்விகளை முகத்துக்கு நேராக கேட்டு போட்டியாளர்களை திணற வைத்த விஜய் சேதுபதி இந்த சீசனிலும் வருகிறார் என்றதும் அப்போ இந்த சீசன் நன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படியான நிலையில் இந்த சீசன் முதல் போட்டியாளராக "மதுரை முத்து" கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் ஆடிஷன்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் உண்மையாகத்தான் இருக்குமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மதுரை முத்து மேடைகளிலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார். கடந்த மாதத்தில் தன்னுடைய சொந்த ஊரில் அப்பா அம்மா மற்றும் முதல் மனைவிக்கு கோவில் ஒன்றையும் கட்டி இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுரை முத்து கலந்து கொள்கிறார் என்றதும் சிலர் இதை பாராட்டி வருகின்றனர். சிலர் அவர் வந்தாலே மொக்க காமெடி போடுவாரே என்று கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள். எது எப்படியோ இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை முத்து மட்டும் அல்லாமல் இன்னும் சில போட்டியாளர் அவர்களும் இந்த நிகழ்ச்சிக்காக ஆடி சென்னையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில்,குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் உமைர் லத்தீஃப், சபானா ஷாஜஹான், வி.ஜே. பார்வதி, அம்ருதா ஸ்ரீனிவாசன், அக்ஷிதா அசோக், பால சரவணன், பாக்கியலட்சுமி சீரியல் நேகா ராஜேஷ் மேனன், சதீஷ் கிருஷ்ணன், வினோத் பாபு, புவி அரசு ஆகியோரின் பெயர்கள் அதிகம் அடிபடுகின்றன. மேலும், நடிகை ஃபரினா ஆசாத் மற்றும் நடிகை பூனம் பஜ்வா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications