பிக் பாஸ் 9 முதல் போட்டியாளராக டாக்டர் திவாகர்.. “நடிப்பு அரக்கன்”னு சொன்னதும் நோஸ்கட் செய்த விஜய் சேதுபதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பிக் பாஸ் தமிழ் சீசன் 9' நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாகத் தொடங்கியது. ஆடல், பாடல், புதிய வீடு எனச் சுறுசுறுப்பாக ஆரம்பித்த இந்த சீசனில், முதல் போட்டியாளராக உள்ளே வந்தவர் 'வாட்டர்மெலன் ஸ்டார்' என்று சமூக ஊடகங்களில் பிரபலமான திவாகர் ஆவார்.

Bigg Boss 9 Tamil Bigg Boss Tamil 9

விஜய் சேதுபதியின் கலகலப்பான வரவேற்புக்கு மத்தியில் திவாகர் மேடைக்கு வந்தார். அப்போது பார்வையாளர்கள் சிலர் உற்சாகத்தில் "நடிப்பு அரக்கன்" என்று திவாகரை அழைத்தனர். இந்த வார்த்தையைக் கேட்டதும், தொகுப்பாளர் விஜய் சேதுபதி உடனடியாகக் கோபமாக ரியாக்ட் செய்தார்.

"அந்தப் பட்டத்தை இங்கே சொல்ல வேண்டாம்!" திவாகர் தனது பல நேர்காணல்களிலும் தன்னை 'நடிப்பு அரக்கன்' என்று தானே அழைத்துக்கொண்டது குறித்து விஜய் சேதுபதி மறைமுகமாகப் பேசினார். கோபத்துடன் அவர், "அவர் இதை பல இன்டர்வியூவில் சொல்லி இருக்கிறார். அதை இங்கே சொல்ல வேண்டாம்! அவருடைய உண்மையான திறமையை மட்டும் இங்கே அங்கீகரிப்போம்" என்று கடுமையாக மறுத்தார்.

ஒரு கலைஞனின் உழைப்பை மட்டுமே பிக் பாஸ் மேடையில் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் சேதுபதி பேசியது, பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து, நிகழ்ச்சிக்காக நடந்த ஆடிஷனில் திவாகரிடம் அவரது படிப்பு குறித்துப் பல கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் சிறப்பாகப் பதில் அளித்து அனைவரையும் கவர்ந்ததாகவும் விஜய் சேதுபதி பாராட்டினார். நடிப்புத் திறமைக்கு அப்பாற்பட்டு ஒருவரின் அறிவை அங்கீகரிக்க வேண்டும் என்பதை விஜய் சேதுபதி வலியுறுத்தினார்.

திவாகரின் ஆசை

திவாகர் குறித்த பிரத்யேக வீடியோ ஒன்று பிக் பாஸ் மேடையில் ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோவில், திவாகர் தனது தனிப்பட்ட ஆசைகளையும், மனதின் வலிகளையும் உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார்.

"நான் பள்ளிப் பருவத்திலிருந்தே நடிப்பில் சிறந்து விளங்கினேன். ஆனால், பலர் என்னைப் பற்றித் தவறாகப் பேசினார்கள். அப்படித் தவறாகப் பேசியவர்களுக்கு என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்," என்று அவர் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.

மேலும், இந்தப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றால், அந்தப் பணத்தை வைத்து ஒரு பிசியோதெரபி மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் ஆசை என்றும் திவாகர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

பிறகு விஜய் சேதுபதி திவாகரிடம் நீங்க உங்களுக்கு தெரிந்த சில விஷயங்களை எல்லா இடங்களிலும் செய்து கொண்டு இருக்கீங்க இனியாவது உங்களுடைய திறமையை முழுமையாக வெளிக்காட்டுங்கள் என்று சொன்னார். அதற்கு திவாகர் சார் எனக்கு ஒரே ஒரு ஆசை உங்க முன்பு ஒரு காட்சி மட்டும் நடித்துக் காட்டவேண்டும் என்று சொன்னதும் விஜய் சேதுபதி நான் இப்பதானே சொன்னேன் வெளியே எல்லா இடமும் பண்ற அதே விஷயத்தை இந்த மேடையிலும் பண்ண முடியாது. இது அதற்கான மேடை இல்லை என்று அவரை அங்கிருந்து இரண்டு ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னார். அதில் ஒன்று நீர் மற்றொன்று நெருப்பு அதில் திவாகர் நெருப்பை செலக்ட் செய்து ரெட் பெண்டுடன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருக்கிறார்.

விஜய் சேதுபதியின் கூர்மையான கேள்விகள் மற்றும் திவாகரின் உள்ளத்தைத் தொட்ட பேச்சால், முதல் போட்டியாளருக்கான வரவேற்பே ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் எகிற வைத்துள்ளது. விஜய் சேதுபதியின் இந்த வெளிப்படையான பேச்சு, திவாகரின் ஆட்டத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+